செய்திகள்
[ Wednesday, 23-04-2014 09:15:56 ]
முஸ்லிம் மக்கள் பற்றி முன்னெடுத்து வரும் பிரசாரம் சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பொதுபால சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
[ Wednesday, 23-04-2014 08:18:56 ]
மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றிவளைத்த பயங்கரவாத பொதுபல சேனா, தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக ஜாதிக பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Wednesday, 23-04-2014 07:52:01 ]
ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 23-04-2014 07:14:44 ]
வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம், புலிப் பயங்கரவாதம் என்ற நாடகத்தை நடிக்க ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.  
[ Wednesday, 23-04-2014 06:59:01 ] []
எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதிலேயே எமது மதத்தின், இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
[ Wednesday, 23-04-2014 06:44:34 ]
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றிக்கு இடையில் தன்னூடாக பரிமாறிக் கொள்ளப்பட்ட சகல கடிதங்கள் மற்றும் செய்திகளை உள்ளடக்கி இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 23-04-2014 06:05:28 ]
கொழும்பு 8, பொரளை - பேக்கரிவத்தை பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Wednesday, 23-04-2014 05:59:31 ]
காவி அணிந்தவர்கள் அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல என புத்தசாசன அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 23-04-2014 05:52:37 ]
தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் பின்னால் இருந்து செயற்படும் நபர் அமைச்சர் றிசாத் பதியூதீன் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
[ Wednesday, 23-04-2014 05:48:16 ]
இந்திய மத்திய அரசு வடக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு அழைத்துள்ளது என்று ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்த போதும், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகமும் அவற்றை முற்றாக மறுத்துள்ளன.
[ Wednesday, 23-04-2014 05:22:01 ] []
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலைஞர்மடம், பனையடி எனப்படும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் முடிக்குரிய காணியை சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து படைத்தளம் அமைத்துள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் முறையிடப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதிக்கு அவர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார்.
[ Wednesday, 23-04-2014 05:09:49 ]
வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் இன்றும் நாளையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில் வெளிநாட்டுக் கல்வியியலாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
[ Wednesday, 23-04-2014 04:58:36 ] []
ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் சட்டவிரோதமாக நடைபெறும் கருங்கல் அகழ்வு இயற்கை சமநிலையை வெகுவாக பாதிக்கிறது. இதை முன்னர் சுட்டிக்காட்டியதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த கருங்கல் அகழ்வு மீண்டும் நடைபெறுவதானது, தாயகத்தின் வளங்கள் சூறையாடப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்.
[ Wednesday, 23-04-2014 04:41:04 ]
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கும்,  கிரிக்கெட் சபைக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
[ Wednesday, 23-04-2014 04:31:45 ]
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்றபோது கைதாகி அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.