செய்தி
ஒலிவடிவம்:
தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததற்கான காரணங்கள்!- ஐ.நா. வில் இந்திய பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 12:00.49 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்று,ம் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 25-04-2014, 03:25.32 AM ]
முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.
[ Friday, 25-04-2014, 03:15.45 AM ]

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[ Friday, 25-04-2014, 02:36.02 AM ]
குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு தேவையான பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ Friday, 25-04-2014, 02:13.34 AM ]
கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டுக்காக 500 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.
[ Friday, 25-04-2014, 02:08.57 AM ]
பொதுபல சேனா இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 24-04-2014 07:36:20 GMT ]
உலகிலேயே மிகவும் அபாயகரமான தொழிலாளாக வங்கதேசத்தில் நடைபெறும் கப்பல் உடைப்பு வேலை என தெரியவந்துள்ளது.
[ Friday, 25-04-2014 04:18:45 GMT ]
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திரமோடிக்கு தனது பதவியைப் பற்றி மட்டுமே கவலை, மக்களைப் பற்றிக் கவலையில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
[ Thursday, 24-04-2014 12:46:14 GMT ]
ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார்.
[ Friday, 25-04-2014 03:11:27 GMT ]
சமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் 2014ம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருவாய் தொடர்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 14:44:22 GMT ]
கேரளாவின் மெகாஸ்டார் மம்மூட்டி படப்பிடிப்பின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 24-04-2014 15:09:45 ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ