செய்தி
யாழில் கணவரால் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில்!- கணவன் தலைமறைவு
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 04:14.17 PM GMT ]

யாழ். ஆணைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே குறித்த பெண் மீது அவரது கணவன் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து, கணவன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பெண் பாடசாலை ஒன்றில் சமையல் வேலைக்கு செல்பவர் என்றும் இன்று காலை வழமைபொல் வேலைக்கு செல்ல தயாராகும் போதே இவ்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள கணவரைத் தேடிக் கைது செயற்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 30-07-2014, 12:31.40 PM ]
வடக்கில் உள்ள 400 பாடசாலைகளில் 80 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
[ Wednesday, 30-07-2014, 12:10.41 PM ]
திருகோணமலை நகரில் இருந்து கிண்ணியா நோக்கி 8 கி.மீ தூரத்திலும் கிண்ணியாவில் இருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது சீனக்குடா. இங்குதான் சீனக்குடா விமானப் படைத்தளம் உள்ளது.
[ Wednesday, 30-07-2014, 11:34.37 AM ]
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெறப்பட்ட கடனுக்காக வருடாந்தம் திருப்பி செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாத இக்கட்டான நிலைமையை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 30-07-2014, 11:00.10 AM ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 30-07-2014, 10:26.26 AM ]
தொலைபேசி மூலமாக தனக்கு தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறி சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Wednesday, 30-07-2014 12:21:28 GMT ]
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
[ Wednesday, 30-07-2014 10:30:14 GMT ]
நித்யானந்தாவை பிடிக்க கர்நாடக பொலிசார் தனிப்படை அமைத்து ஹரித்வாரிற்கு விரைந்து சென்றுள்ளனர்.
[ Wednesday, 30-07-2014 11:56:52 GMT ]
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பாலோ–ஆன் ஆனது.
[ Wednesday, 30-07-2014 05:24:40 GMT ]
LG நிறுவனம் 105 அங்குல அளவுடைய பெரிய தொலைக்காட்சி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
[ Wednesday, 30-07-2014 08:23:47 GMT ]
டென்மார்க்கில் வசிக்கும் வல்வெட்டித் துறையின் சிறந்த எழுத்தாளர், கலைஞர் திரு. செல்லத்துரை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 30-07-2014 12:10:41 ]
திருகோணமலை நகரில் இருந்து கிண்ணியா நோக்கி 8 கி.மீ தூரத்திலும் கிண்ணியாவில் இருந்து 5 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது சீனக்குடா. இங்குதான் சீனக்குடா விமானப் படைத்தளம் உள்ளது.