செய்தி
பட்டதாரிகள் தலையில் மற்றுமொரு இடி
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 11:55.52 PM GMT ]
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில், 2010, 2011 ஆம் ஆண்டு பட்டதாரிகளைப் பயிற்சி பட்டதாரிகள் பதவிக்கு இணைத்துக் கொள்வது கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையால் அவ்வருடம் பட்டம் பெற்ற பல பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், அரச நிர்வாக அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இம்மாதம் 4 ஆம் திகதி அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பி வைத்த கடிதத்தில் 2010, 2011ம் ஆண்டு பட்டதாரிகளை பயிற்சி பட்டதாரிகள் பதவிக்கு இணைத்துக் கொள்வது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் பட்டதாரிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்க உங்கள் அமைச்சு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் ஏற்பட்ட குளறுபடிகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தோம்.

அமைச்சு 4 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தால் 3000 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்றுள்ளனர். சிலர் நியமனத்திற்காக்க் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதனால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னுடன் பட்டம் பெற்ற சிலர் வேலைக்குச் செல்வதால் சிலர் கவலையடைந்துள்ளனர். அனைத்து தகுதிகளும் உள்ளபோது இவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த விடயம் தொடர்பில் நீங்கள் உடனடி கவனம் செலுத்தி குறித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 20-04-2014, 12:33.45 AM ]
இலங்கையில் உள்ள முஸ்லிம் மதத் தலைவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், பௌத்த மஹாநாயக்கர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
[ Sunday, 20-04-2014, 12:22.33 AM ]
அண்மையில் நெடுங்கேணி பிரதேசத்தில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.  சிங்களப் பத்திரிகையொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
[ Sunday, 20-04-2014, 12:15.12 AM ]
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்காக சட்ட ஆலோசனைகளை பெறவும்ää சட்டத்தரணிகளை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 20-04-2014, 12:02.23 AM ]
நீ குஜராத்தில் செஞ்சதைத்தானே நான் இலங்கையில் பண்ணினேன். நீ நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை குஜராத் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைப் போலத்தான் நான் இங்கே முள் வேலி முகாமுக்குள் தமிழர்களை அடைத்து வைத்திருக்கிறேன். என்னைக் கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?’’ என கொடுங்கோலன் ராஜபக்சே திருப்பிக் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?
[ Saturday, 19-04-2014, 03:59.40 PM ]
அதிகார மேதாவிகளால் அரச ஊடகங்களில் கிளிநொச்சி விவசாயிகளை துரோகிகளாக சித்தரிக்கும் கயமைத்தனத்தைக் கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலியுறுத்தியும் மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 19-04-2014 06:21:29 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
[ Saturday, 19-04-2014 13:30:40 GMT ]
நடிகை குஷ்புவின் உடல்நலம் சீரானதால் மீண்டும் நான்கு நாட்கள் அவர் திமுகவிற்காக பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
[ Saturday, 19-04-2014 14:57:39 GMT ]
கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[ Saturday, 19-04-2014 05:21:46 GMT ]
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
[ Saturday, 19-04-2014 12:53:58 GMT ]
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் ஜோடியாக நடித்த படம் நிமிர்ந்து நில்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 21:04:17 ] []
சேது புகழ் சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.