செய்தி
இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி விவகாரம்! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 12:21.58 AM GMT ]
இலங்கை வீரர்களுக்கு வேறு மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை விமானப் படை வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் பயிற்சி பெறுகிறார்கள் என்று செய்தி கேள்விப்பட்டதும், தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்புகொண்டு அவர்களைத் திருப்பி அனுப்ப கேட்டுக் கொண்டேன்.

மத்திய அரசும் தமிழகத்தில் இருந்து அவர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

வேறு மாநிலத்தில் பயிற்சி: இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால் என்ன செய்வது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படிப் பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம் என்று சொன்னேன். அதன் பிறகுதான் பயிற்சி பெற வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகத்துக்கு அனுப்பியதாக செய்தி வந்தது.

இந்தச் செய்தி வந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

இதுதொடர்பாக செய்தியாளர்களும் என்னிடம் கேள்வி கேட்காததால், அதைச் சொல்லவில்லை.

இதனால் எனக்குத் தமிழ் உணர்வே இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.

அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956-ம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள்.

போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று கூறியதுடன், பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் யார் என்பதையும் தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.

இனியாவது விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதத்தை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளிக்க ஜெயலலிதா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 20-04-2014, 05:49.54 AM ]
சீவிய வல்லப்பட்டா மர தூள்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 20-04-2014, 05:40.03 AM ]
இந்­தி­யாவில் கட்டம் கட்­ட­மாக நடை­பெற்­று­வரும் வாக்­க­ளிப்பில் பார­தீய ஜனதாக் கட்­சிக்கே அதிக வாய்ப்பு இருப்­ப­தா­கவும் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­திர மோடியே தெரிவு செய்­யப்­படும் சாத்­தி­யங்கள் இருப்­ப­தா­கவும் கருத்துக் கணிப்­புக்கள் கூறு­கின்­றன.
[ Sunday, 20-04-2014, 03:37.28 AM ]
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 20-04-2014, 03:29.50 AM ]
குமரன் பத்மநாதன் மீதான சர்வதேச இன்டர்போல் பொலிஸாரின் குற்றச்சாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
[ Sunday, 20-04-2014, 03:04.38 AM ]
இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 20-04-2014 03:14:25 GMT ]
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.
[ Sunday, 20-04-2014 05:49:07 GMT ]
கடும் முதுகுவலியோடு சாலையோரம் பிரசாரம் செய்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
[ Sunday, 20-04-2014 05:45:15 GMT ]
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் பீட்டர் மூர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 19-04-2014 13:23:42 GMT ]
உங்கள் வீட்டில் அதிகமான கரண்ட் பில் இருந்தால் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.
[ Saturday, 19-04-2014 12:53:58 GMT ]
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் ஜோடியாக நடித்த படம் நிமிர்ந்து நில்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 20-04-2014 02:03:03 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறப்பட்டு, நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் மரணத்துடன், வடக்கில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளரும் அறிகுறிகள் தென்படுகின்றன.