செய்தி
நிபந்தனையின்றி பொன்சேகாவை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும்: சஜித் பிரேமதாச
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 02:03.15 AM GMT ]
நிபந்தனைகள் இன்றி சரத் பொன்சேகாவை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். கட்சியில் இணைந்து கொள்வதற்கு பூரணமான ஒத்துழைப்புக்களை நான் வழங்குவேன்.

நிபந்தனைகள், சட்டங்களை பிறப்பிக்காது சரத் பொன்சேகாவிற்கு உரிய பதவிகளை வழங்க கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரத் பொன்சேகா கட்சியில் இணைந்து கொண்டால் அது கட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை. உறுப்பினர்களுக்கு இடையில் மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி போதிரணசிங்க அமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது சஜித் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமாயின் உத்தியோகபூர்வமாக அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் எனவும் தலைமை தாங்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியை கலைக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 29-07-2014, 11:35.27 AM ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 29-07-2014, 11:13.24 AM ]
ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் யாழ். ஊடகவியலாளர்கள் 07 பேர் செய்த முறைப்பாடு தொடர்பில் 03 மணி நேரமாக இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
[ Tuesday, 29-07-2014, 10:57.47 AM ]
இலங்கை அரசாங்கம் சமாதானம் என்று கூறும் 5 வருட காலகட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தளவில் கலாசார சீரழிவுகள், மாணவர் தற்கொலை அதிகரிப்பு, மதுபானசாலைகளின் அதிகரிப்பு ஆகியவையே அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
[ Tuesday, 29-07-2014, 10:38.50 AM ]
நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து களத்தில் இறக்க வேண்டும் என்ற கருத்து பலமாக உள்ளது. 
[ Tuesday, 29-07-2014, 08:07.15 AM ]
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நியமித்த சர்வதேச விசாரணைக் குழுவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேசத்துரோகமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 29-07-2014 08:29:57 GMT ]
ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 29-07-2014 09:44:32 GMT ]
மோடியின் தொலை நோக்கு திட்டம் இந்தியா – அமெரிக்கா வின்உறவை வலுப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 29-07-2014 12:00:41 GMT ]
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மீது இரு விதமான பார்வைகள் உள்ளன.
[ Tuesday, 29-07-2014 07:11:26 GMT ]
விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் கணனிகளில் மல்வேர்கள் அல்லது வைரஸ்கள் தாக்கிய பின்னர் சில கோப்புக்கள், கோப்புறைகளை அழிக்கவோ, நகல் செய்யவோ அல்லது இடம்மாற்றவோ முடியாமல் போகும்.
[ Tuesday, 29-07-2014 08:45:36 GMT ]
தமிழ் சினிமாவில் இதுவரை படங்களை பாகமாக எடுத்தது மிக குறைவு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 28-07-2014 05:27:16 ]
சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்தில், அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.