செய்தி
இலங்கையின் கேந்திர நிலைகளை குறி வைத்து இந்திய அக்னி ஏவுகணைகள்! சிங்கள ஊடகம்
[ வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2012, 01:10.56 AM GMT ]
அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம், இரத்மலானை, மற்றும் மத்தால விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல் மின்நிலையம். கெரவலப்பிட்டிய- களனிதிஸ்ஸ மின்நிலையங்கள் உள்ளிட்ட பல கேந்திர நிலைகளை இலக்கு வைத்தே இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்த அக்னி ஏவுகணைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1000 தொடக்கம் 2000 கிலோ எடையுள்ள அணுவாயுதத்தை சுமந்து கொண்டு 1000 தொடக்கம் 8000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை விரிவாக்கப்பட்டுள்ளது.

அக்னி 5 ஏவுகணை மூலம் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கமுடியும்.

ஈரான், பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் வழியான சீனாவின் விநியோகப் பாதையை துண்டிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இரகசியமாக இணைந்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா விருத்தி செய்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 19-04-2014, 12:36.09 PM ]
கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எங்களிடம் மிகவும் அதிகம் என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்வது அவ்வளவுக்கு நல்லதல்ல. எனினும் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
[ Saturday, 19-04-2014, 12:04.48 PM ]
நீர்கொழும்பு நகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
[ Saturday, 19-04-2014, 11:46.08 AM ]
தொண்டமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-04-2014, 11:44.52 AM ]
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, ஆலோசகர்கள் சிலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
[ Saturday, 19-04-2014, 11:19.07 AM ]
கசினோ மற்றும் சூதாட்ட பந்தயம் தொடர்பில் அரசாங்கம், புதிய பெயரில் சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஜே.வி.பி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Saturday, 19-04-2014 06:21:29 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
[ Saturday, 19-04-2014 07:56:53 GMT ]
தேர்தல் பிரசாரம் சூடி பிடித்துள்ள நிலையில் ஜெயலலிதாவிடம் கேள்வி ஒன்றை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.
[ Saturday, 19-04-2014 10:49:21 GMT ]
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்து விளையாடி வருகின்றது.
[ Saturday, 19-04-2014 05:21:46 GMT ]
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
[ Saturday, 19-04-2014 12:08:22 GMT ]
நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் யான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 21:04:17 ] []
சேது புகழ் சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.