செய்தி
கைதிகளின் படுகொலை வரிசையில் நிமலரூபன், டெல்றொக்சன் இவர்களுக்கு அடுத்தது யார்?- பா.உ சி.சிறீதரன்
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:15.27 PM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி அடித்து படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவரது உடலை சுதந்திரமாக சொந்த ஊரில் மத அனுட்டானங்களுடன் நல்லடக்கம் செய்வதற்கு கூட இந்த அரசு தடை விதிக்க முயற்சிக்கின்றது.

இதன் மூலம் அரசாங்கம் தமிழர்களை இன்னமும் மனிதர்களாக கூட நினைக்கவில்லை என்பதையே உணரமுடிகின்றது. இந்த அரசாங்கம்தான் தமிழர்களுக்கொரு தீர்வினை பெற்றுத் தரும் என சர்வதேசம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றது.

இன்றைய நிலையில் நாம் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக சர்வதேசத்திற்கு கூறிக்கொள்கின்றோம். மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்திருக்கின்றார்.

டெல்றொக்சனின் உயிரிழப்பு தொடர்பாகவும், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பொலிஸார் தொடர்ந்து இடையூறு விளைவிக்க எடுத்துக் கொண்ட முயற்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

அதாவது டெல்றொக்சன் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவருக்கு முன்னர் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டார். நாளை, நாளை மறுதினம் யார்..? என்ற கேள்வியோடுதான் நாங்கள் ஒவ்வொரு நாளையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நாம் ஒருவரின் மரணத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் அந்த இளைஞனின் மரணத்தின் பின்னால் எங்கள் இனத்தின் உண்மையான நிலைவரம் உலகத்தின் மனசாட்சிக்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் அதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

நிமலரூபன், டெல்றொக்சன் இவர்கள் எங்கள் இனத்தின் நிலையை தங்கள் மரணத்தின் மூலம் காண்பித்திருக்கின்றார்கள். இந்த இளைஞர்களின் படுகொலைகளுக்கு நிச்சயமாக உலகம் பதில் சொல்லவேண்டும். அதற்கான காலம் நிச்சயமாக வரும், அதற்கான அந்த நோக்கத்திற்காக நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

யுத்தம் தீர்ந்து ஜனநாயகம் மலர்ந்துள்ள தேசத்தில் குரூரமாக படுகொலை செய்யப்பட்ட எங்கள் சொந்தங்களுக்காக எங்கள் உளமார்ந்த அனுதாபங்களை நாங்கள் கூறிக்கொள்கின் றோம்.

அவர்களுடைய தியாகங்கள் நிச்சயமாக ஒருநாள் அர்த்தமுள்ளதாக்கப்படும், இதற்கான அனைத்து தமிழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று திரளவேண்டும் என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 18-04-2014, 12:03.12 PM ]
டிக்கோயா போர்டைஸ் தோட்டத்தில் தேயிலை மலையில், கொழுந்து பறிப்பதற்கு தயாராக இருந்த தொழிலாளர்களை குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 18-04-2014, 11:59.04 AM ]
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 21.4 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 18-04-2014, 11:22.13 AM ]
மத்தல விமான நிலையத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பார்வையிட சென்ற தமது சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[ Friday, 18-04-2014, 11:05.13 AM ]
20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றிருக்காவிட்டால், தோல்விக்கு காரணம் ஜனாதிபதி என கூறியிருப்பார்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Friday, 18-04-2014, 10:27.47 AM ]
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் முச்சக்கரவண்டி இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
[ Friday, 18-04-2014 10:43:16 GMT ]
வாடிகனில் நடந்த புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டுள்ளார்.
[ Friday, 18-04-2014 08:04:41 GMT ]
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 12 தங்கபிஸ்கட்களை விழுங்கிவிட்டு தவியாய் தவித்து வந்தவருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
[ Friday, 18-04-2014 11:00:18 GMT ]
பஞ்சாப் அணிக்கெதிராக நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Friday, 18-04-2014 05:41:56 GMT ]
கணனித்துறையில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் நிறுவனமான மைக்ரோசொப்ட் அமெரிக்காவில் தனது விற்பனை நிலையங்களை அதிரிக்கின்றது.
[ Friday, 18-04-2014 13:01:34 GMT ]
சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 01:56:57 ]
சிங்களதேசமே !இந்த உலகிலே ஒருமனிதன் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவது தவறு என்று உலகின் எந்த நாட்டின் சட்டங்களாவது சொல்கின்றதா? எந்த ஒரு தனிமனிதனும் சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுவது தவறு என்று அந்த கண்மூடிய புத்தபிரான் என்றாவது உனக்கு சொன்னாரா?