செய்தி
த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 05:45.50 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது, விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது?

இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது? அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக் கொடுக்கவா பார்ப்பது எப்படி சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.

மண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 23-08-2014, 03:15.45 AM ]

அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் உள்ள இலங்கையின் தூதரகங்கள் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த நாடுகளுக்கு விடயம் செய்வதற்காக பல மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

[ Saturday, 23-08-2014, 03:05.25 AM ]
'கத்தி’, 'புலிப்பார்வை’ ஆகிய இரண்டு படங்களுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. தனித்தனி இயக்கங்களாக இருந்த தமிழ், தமிழர் ஆதரவு அமைப்புகளை இதற்காக ஒன்றிணைத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.
[ Saturday, 23-08-2014, 02:21.09 AM ]
இந்திய பிரதமருடன் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தை குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 23-08-2014, 02:20.57 AM ]
கிளிநொச்சி உழவனூர் கிராமத்தில் மக்களின் தேவைகள் குறைகளை கேட்டறியும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
[ Saturday, 23-08-2014, 02:05.48 AM ]
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் கண்ணகி வித்தியாலயத்திற்கு அருகில் வசித்து வரும் இளையதம்பி யாழினி வயது (31)  என்பவர் இன்று சனிக்கிழமை தனது வீட்டில் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 23-08-2014 03:02:22 GMT ]
எகிப்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் உயிரிழந்ததுடன், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
[ Friday, 22-08-2014 14:19:04 GMT ]
திமுகவில் மீண்டும் இணைவதற்கு அழகிரி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 23-08-2014 02:41:28 GMT ]
வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
[ Friday, 22-08-2014 12:11:33 GMT ]
இன்று பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் பிரச்னைகளில் ஒன்று தொப்பை.
[ Friday, 22-08-2014 18:25:26 GMT ]
விஜய் என்றாலே வெற்றி என்று பெயர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 22-08-2014 14:17:45 ]
நல்லூர்க் கந்தப்பெருமானின் ஆலய மகோற்சவத்தில் இன்று காலை மாம்பழத் திருவிழா மிகவும் அற்புதமாக நடைபெற்றது.