செய்தி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 11:49.05 AM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தனது அமைச்சரவை மீளமைத்துள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

15 அமைச்சர்களை கொண்டதாக விரிவாக்கம் பெற்றுள்ள அமைச்சரவை மீளமைப்பு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக செய்தியில்,

பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.

அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாற்றங்கள் அமைச்சரவையின் தொடர்ச்சியை உறுதிபடுத்தவும் அதே வேளையில் பல புதிய உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தமை மகிழ்ச்சிக்குரியதே.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினது இலக்கினை அடைவதற்கு மீளக் கட்டமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் விபரங்கள்:

துணைப் பிரதமர்கள்:

திரு உருத்திராபதி சேகர் - மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல்

பேராசிரியர் செல்வா செல்வநாதன் -  நிதித்துறை

திருமதி சுபா சுந்தரலிங்கம் - துறைசாரா அமைச்சர் - பிரதமர் பணியகத் தலைவி

அமைச்சுக்களின் விபரங்கள் :

திரு டிலக்சன் மொறிஸ் - இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணை-தடுப்பு

திருமதி பாலாம்பிகை முருகதாஸ் - பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல்

கலாநிதி தவேந்திர ராஜா - கல்வி, உடல்நலத்துறை

திரு முத்துக்குமாரசுவாமி இரத்னா - ஏதிலிகள் விவகாரம்

திரு சாம் சங்கரசிவம் - வெளியீடுகள் ஆவணக் காப்பகத்துறை

திருமதி ரஜனி சின்னத்தம்பி - தமிழ் கலைகள் தொன்மை பேணல்

திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் - அரசியல் கைதிகள, போர்க்கைதிகள், இடம்பெயர்ந்தோர் விவகாரம்

திரு சிவகுருநாதன் சுதர்சன்  -   ஊடக விவகாரம்

செல்வி வாசுகி தங்கராஜா -  அனைத்துலக விவகாரம்

திரு தணிகாசலம் தயாபரன் - அரசியல் விவகாரம்

திரு நிமால் விநாயகமூர்த்தி - பொருண்மிய அபிவிருத்தி,  சூழல்துறை

மீளமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் பலர் இணைக்கப்பட்டும்  ஏற்கனவே இருந்த சில அமைச்சுக்களைப் பிரித்தும், வேறு சிலவற்றின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டும் உள்ளது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 21-04-2014, 03:36.46 AM ]
முஸ்லிம் மக்கள் மிகவும் பொறுமையுடனும், மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டிய தருணம் இதுவென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
[ Monday, 21-04-2014, 02:49.13 AM ]
வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
[ Monday, 21-04-2014, 02:18.43 AM ]
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களை சர்வதேச மட்டத்தில் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
[ Monday, 21-04-2014, 02:11.25 AM ]
தேர்தல் ஆதாயத்துக்காக நீதித் துறையை அவமதிக்கும் செயலில் திமுக தலைவர் கருணாநிதி ஈடுபட்டதாக, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Monday, 21-04-2014, 02:09.23 AM ]
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையுடன் பிரித்தானியா கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தக்கோரும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளன.
[ Monday, 21-04-2014 04:14:04 GMT ]
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
[ Monday, 21-04-2014 03:23:02 GMT ]
ஆந்திராவின் சொப்பனான்டி என்ற இடத்தில் மூன்று சிறுமிகளை, சூளை உரிமையாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 20-04-2014 21:10:04 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் என்பதே எளிதில் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும் பொழுது இரட்டை சதம் என்பது சாதனைகளை தாண்டி வரும் சாதனையாக தான் கருத வேண்டும்.
[ Monday, 21-04-2014 02:25:06 GMT ]
கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Cyanogenmod 11S இயங்குதளத்தில் செயற்படக்கூடிய OnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரையில் அறிமுகமாகவுள்ளது.
[ Sunday, 20-04-2014 13:19:41 GMT ]
லண்டனில் இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்டார் விஜய் நைட் மாபெரும் இசைநிகழ்ச்சி O2 Arena பிரம்மாண்டமான மேடையில் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களோடு நடைபெறவிருக்கின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 20-04-2014 02:03:03 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறப்பட்டு, நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் மரணத்துடன், வடக்கில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளரும் அறிகுறிகள் தென்படுகின்றன.