செய்தி
யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளையின் ஊழியர் 7 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுடன் தலைமறைவு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 04:26.02 PM GMT ]
இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கிளையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விடயத்தை வங்கி நிர்வாகம் ஊடகங்களுக்கு கசியவிடாது பார்த்துக் கொண்டது. எனினும் விடயம் ஊடங்களுக்கு இன்று மாலை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, யாழ். குடாநாட்டில் இயங்கும், சில ஊடகங்களின் முதலாளிகளுடன் தொடர்பு கொண்ட வங்கி நிர்வாகம் குறித்த செய்தி வெளியிடப்பட்டால் மக்கள் வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை அற்றுப்போகும். எனவே அவ்வாறு ஏதேனும் நடந்தால், எங்கள் விளம்பரங்கள் உங்களுக்கு கிடையாது என கூறியுள்ளது.

அதனையடுத்து, செய்தியை தணிக்கை செய்ய அந்த ஊடக நிர்வாகங்கள், ஆசிரிய பீடத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தின்போது பெருமளவு மக்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளின் அத்தாட்சித் துண்டுகளை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், யுத்தத்தின் பின்னர் தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அவற்றை மீட்க முயற்சித்தபோதும், அந்த மக்களுக்கு அவை கிடைக்கவில்லை. குறிப்பாக புதுக்குடியிருப்பில் 5 பவுண் நகையை 23 ஆயிரத்திற்கு 2008ம் ஆண்டு பெண்ணொருவர் அடகு வைத்துள்ளார்.

ஆனால் அதற்கான அத்தாட்சித் துண்டை யுத்தகாலத்தில் தொலைத்துவிட்டு, யுத்தத்தின் பின்னர் அந்த நகையினை மீட்பதற்கு குறித்த மக்கள் வங்கியின் கொழும்பு தலைமையகம் வரையில் ஏறியிறங்கியிருக்கின்றார். ஆனால் இன்றுவரை அந்த நகை அவருக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு பல சம்பவங்கள் இந்த வங்கியினால் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏனைய வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு அவர்களுடைய நகைகளை வழங்கியிருக்கின்றது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 26-07-2014, 10:48.52 AM ]
யூலை 23 கலவரம் , 31 ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்ககு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது.
[ Saturday, 26-07-2014, 10:44.17 AM ]
ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி எதிர்ப்பை வெளியிடுகின்ற போதும் காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்களை நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
[ Saturday, 26-07-2014, 10:37.03 AM ]
இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
[ Saturday, 26-07-2014, 10:14.33 AM ]
காரை­ந­கரில் இரண்டு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­பட்ட சம்­பவம் தொடர்பில் இடம்­பெற்ற அடை­யாள அணி­வ­குப்பில் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நிறுத்­தப்­ப­டாது வேறு நபர்­களே நிறுத்­தப்­பட்­டுள்­ளனர் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் நேற்று சபையில் குற்றம்சாட்­டினார்.
[ Saturday, 26-07-2014, 09:44.14 AM ]
காஸாவில் ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு தீர்வுகாணத் தவறியுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக இலங்கையை பின் தொடர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
[ Saturday, 26-07-2014 08:06:48 GMT ]
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.
[ Saturday, 26-07-2014 07:48:06 GMT ]
சிதம்பரத்தில் படுகொலை செய்யப்பட்ட துணை ஆய்வாளர் கணேசனின் கள்ளக்காதலி வனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
[ Saturday, 26-07-2014 07:33:49 GMT ]
கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் ஷோயப் மாலிக் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் விதிமீறி நடந்து கொண்டதற்காக கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 26-07-2014 04:55:25 GMT ]
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
[ Saturday, 26-07-2014 08:56:20 GMT ]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 25-07-2014 07:01:42 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை 'புலிப்பார்வை' திரைப்படத்தில் ஒரு 'சிறார் போராளியாக' சித்தரிக்கும் தமிழ் சினிமாக்காரர்களின் சதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.