செய்தி
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை
[ திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட் 2012, 07:30.41 AM GMT ]

யாழ்ப்பாணம்,  ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை வெட்டப்பட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சடலத்துக்கருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிசொச்சி, இராமநாதபுரம், புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தொழில் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் குறித்த நபர் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்ததாகவும், இடையில் அவரைக் காணவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது குறித்த நபரின் உறவினர் வீட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது, அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 19-04-2014, 12:36.09 PM ]
கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எங்களிடம் மிகவும் அதிகம் என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்வது அவ்வளவுக்கு நல்லதல்ல. எனினும் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
[ Saturday, 19-04-2014, 12:04.48 PM ]
நீர்கொழும்பு நகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
[ Saturday, 19-04-2014, 11:46.08 AM ]
தொண்டமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-04-2014, 11:44.52 AM ]
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, ஆலோசகர்கள் சிலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
[ Saturday, 19-04-2014, 11:19.07 AM ]
கசினோ மற்றும் சூதாட்ட பந்தயம் தொடர்பில் அரசாங்கம், புதிய பெயரில் சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஜே.வி.பி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Saturday, 19-04-2014 06:21:29 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.
[ Saturday, 19-04-2014 07:56:53 GMT ]
தேர்தல் பிரசாரம் சூடி பிடித்துள்ள நிலையில் ஜெயலலிதாவிடம் கேள்வி ஒன்றை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.
[ Saturday, 19-04-2014 10:49:21 GMT ]
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்து விளையாடி வருகின்றது.
[ Saturday, 19-04-2014 05:21:46 GMT ]
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
[ Saturday, 19-04-2014 12:08:22 GMT ]
நடிகர் ஜீவா தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் யான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 21:04:17 ] []
சேது புகழ் சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.