செய்தி
(2ம் இணைப்பு)
 
அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்
[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 04:55.01 AM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தில்ரூக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியே  உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் இந்த இளைஞர் சிகி;ச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார் இந்தநிலையிலேயே மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்தமையை அடுத்தே அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிமலரூபன் என்ற இளைஞர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இரண்டாம் இணைப்பு

வவுனியா சிறைச்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிறிதொரு தமிழ் அரசியல் கைதி இன்று காலை
மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.

இன்று ராகம மருத்துவமனையில் மரணமானவர் 34 வயதான மரியதாஸ் நேவிஸ் தில்ருக்ஷன் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்  எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அரசியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட தினத்திலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஹர மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்ததை தொடர்ந்து அங்கிருந்ததமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியும் கடந்த மாதம் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமானமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 26-07-2014, 04:51.12 PM ]
நாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து, விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார்
[ Saturday, 26-07-2014, 04:20.08 PM ]
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
[ Saturday, 26-07-2014, 04:15.02 PM ]
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 26-07-2014, 03:05.31 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 26-07-2014, 03:02.28 PM ]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
[ Saturday, 26-07-2014 11:50:43 GMT ]
ரஷ்யாவில் சிங்கம் ஒன்று குழந்தையை கடித்து இழுத்த போது குழந்தையின் தாய் குழந்தையை லாபகமாக தாவி பிடித்துள்ளார்.
[ Saturday, 26-07-2014 10:57:04 GMT ]
கார்கில் போர் வெற்றியின் 15–வது ஆண்டு நினைவு தினமான இன்று பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
[ Saturday, 26-07-2014 08:50:15 GMT ]
தனது ரசிகர் தன்னை கட்டித்தழுவ வந்ததையடுத்து அவரை காவலாளியிடம் இருந்து காப்பாற்றினார் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்.
[ Saturday, 26-07-2014 12:21:42 GMT ]
வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம்.
[ Saturday, 26-07-2014 17:43:32 GMT ]
சூப்பர் ஸ்டார் இதுவரை விளம்பரங்களில் நடித்ததே இல்லை என்று அனைவருக்கும் தெரியும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 26-07-2014 14:19:47 ]
ஜனாதிபதி ராஜபக்ச என்ன வீரம் பேசினாலும், உலகில் தனது உண்மை நிலை எப்படியாக உள்ளது என்பதை மிக நன்றாக அறிந்தவராக உள்ளார். இதன் காரணமாக கடந்த சில மாதங்கள், வருடங்களாக இவர்கள் உலகில் பலம் பொருந்திய நாடுகளை தமது நணபர்களாக்கும் நோக்கில் செய்யும் முயற்சிகள் எண்ணில் அடங்காது!