செய்தி
சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் கல்லால் எறிந்து கொலை!- வவுனியாவில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 05:00.23 AM GMT ]
மதுபோதையில் சென்ற இரு இளைஞர்களுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வவுனியா, ஓயா சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் எஸ். கந்தராஜா (வயது55)  என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்நாள் இரவு மதுபோதையில் குறித்த கடைக்குச் சென்ற இரு இளைஞர்களும் சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.

இவர்கள் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் போல் தோற்றமளித்ததாலும் மதுபோதையில் இருந்ததாலும் சிகரெட் வழங்க கடை உரிமையாளர் மறுத்துள்ளார்.

இதனால் அவர்கள் கற்களால் குறித்த கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-04-2014, 06:08.23 AM ]
மாத்தளை நகரின் கொடபொல சந்தியில் இன்று காலை மூன்று வர்த்தக நிலையங்கள் தீ பற்றி எரிந்துள்ளன.
[ Thursday, 24-04-2014, 05:56.34 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 24-04-2014, 05:49.24 AM ]
தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பு முடிந்து மானிப்பாய் வீதியினூடாக வீடுகளை நோக்கி சென்று கொண்டிருந்த மாணவர்கள் சிலரை வழிமறித்துள்ள இராணுவத்தினர், துண்டுப் பிரசுரங்கள் வைத்துள்ளீர்களா என்று விசாரணை நடத்திய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
[ Thursday, 24-04-2014, 04:06.38 AM ]
காலஞ்சென்ற நெய்ல் சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை பொரள்ளையில் நடைபெறவுள்ளன.
[ Thursday, 24-04-2014, 03:39.26 AM ]
பூபதி அம்மாவின் தற்கொடை தமிழர்களின் விடுதலைப் போருக்கு பலம் சேர்த்தது. குடும்பப் பாசம், குடும்பப் பற்று என்பதற்கப்பால் இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவற்றுடன் தேசியத் தலைவர் மீதுபற்று, என்பவையும் இணைந்ததாக இந்தியப் படையினருக்கு தமிழ் மக்கள் சார்பான பாடத்தைப் புகட்டியிருந்தது.
[ Thursday, 24-04-2014 01:59:30 GMT ]
பிரேசில் தனியார் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள், அங்கிருந்த பஸ்களுக்கு தீ வைத்துள்ளனர்.
[ Thursday, 24-04-2014 06:30:30 GMT ]
இந்தியாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை மாணவர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
[ Wednesday, 23-04-2014 13:06:19 GMT ]
ஐதராபாத் அணியின் மோசமான களத்தடுப்பால் அணி தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என ஐதராபாத் அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
[ Thursday, 24-04-2014 02:10:29 GMT ]
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்கு பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
[ Wednesday, 23-04-2014 13:51:40 GMT ]
கௌதம் மேனன் தற்போது அஜித்தை வைத்து எடுக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட எகிறி கொண்ட போகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.