செய்தி
சம்பந்தன் சொன்ன கருத்தில் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை!- ஜமமு தலைவர் மனோ கணேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 12:10.36 PM GMT ]
கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த, ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை.

உண்மையில் இந்த அரசாங்கத்துடன், இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள்.

உண்மையில் அங்கே சொல்லப்பட்ட கருத்து, அத்தகைய ஒரு ‘தேசிய அரசு’ யோசனை அரசின் உயர் தலைவரினால், நேரடியாக கூட்டமைப்பு தலைவருக்கு முன் வைக்கப்படுமானால், அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அரச தலைவருக்கு தாம் தெரிவிப்போம் என்றே கூட்டமைப்பு தலைவர் சொன்னார் என நான் நினைக்கிறேன்.

அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமானால், அரசு அதிபரிடம் தான் என்ன சொல்ல போகிறேன் என்பதையும் சுருக்கமாக, ஊடகவியலாளரிடம் சம்பந்தன் தெரிவித்தார் என நான் நினைக்கிறேன்.

தாங்கள், முதலமைச்சர் பதவியையோ, அமைச்சர் பதவியையோ எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அவை பற்றி அரசு தலைவரிடம் பேசும் எண்ணம் தமக்கு இல்லை என்பதையும் சம்பந்தன் சிங்கள மொழியில் சொன்னதை நான் கேட்டேன்.

தமிழர்களின் அபிலாஷைகளையும், இந்த கிழக்கு தேர்தலில் அரசுக்கு எதிராகவே தமிழ் பேசும் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதையும், அப்படியான சந்தர்ப்பத்தில் சம்பந்தன் அரசு தலைவருக்கு நேரடியாக சொல்ல நினைத்திருக்கலாம்.

எனவே இதை, ஏதோ அரசுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தாக மிகைப்படுத்தி அபிப்பிராயம் தெரிவிப்பது முறையில்லை.

மேலும் இந்த அரசாங்கத்துடன் எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண தயாராக இருக்கின்றோம் என்று, நாட்டிற்கும், உலகத்திற்கும் தமிழ் தரப்பு தொடர்ந்து சமிக்ஞை காட்டி வர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும்.

அங்கே போய் அடிப்படை நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே தவிர, அறிவிப்புகளை வைத்துகொண்டு தீர்ப்பு வழங்க கூடாது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 17-04-2014, 12:54.21 AM ]
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகள் (Counseling) வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவித்திருக்கிறது.
[ Thursday, 17-04-2014, 12:43.09 AM ]
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், படைத் தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படவுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
[ Wednesday, 16-04-2014, 11:58.29 PM ]
சிங்கள பௌத்தர்களை அழிக்கும் சக்திகள் விரைவில் வெளிச்சமிடப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 16-04-2014, 11:49.51 PM ]
இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அதற்கு முன்னர் பிரதமராகவும் ஆட்சியில் இருந்துள்ள காலத்தில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கின்ற நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்தவிதமான அரசியல் ரீதியான விருப்பத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று சிபிஜே என்ற ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) சுட்டிக்காட்டியுள்ளது.
[ Wednesday, 16-04-2014, 11:36.04 PM ]
தமிழீழத் தேசியத் தலைவரது வருகைக்குப் பின்னர், தமிழ்த் தேசிய எதிர்நிலையாளர்களும், தமிழ்த் தேசியத்தின் எதிரிகளும் இணைந்து தலைவராதலுக்கும், தலைவராக்குவதற்கும் பல்வேறு பிரயத்தனங்களையும் மேற்கொண்டனர். ஆனாலும், இன்று வரை அது சாத்தியமானதாகப்படவில்லை.
[ Wednesday, 16-04-2014 12:44:00 GMT ]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களையும், சமூக வலைத்தளங்களையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
[ Wednesday, 16-04-2014 10:34:06 GMT ]
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 16-04-2014 14:36:14 GMT ]
மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[ Wednesday, 16-04-2014 13:26:57 GMT ]
பாம்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நடனமாடின என்ற செய்திகள் எப்போதாவது பத்திரிக்கைகளில் வருவதை பார்த்திருப்பீர்கள்.
[ Wednesday, 16-04-2014 10:55:46 GMT ]
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 15-04-2014 08:45:13 ]
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள புதுப் புதுத் திட்டங்களை அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தினர் வகுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.