செய்தி
பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 11:08.52 AM GMT ]

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் பதிவு பிரதியை  பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,

அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.

விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் சமாதானம் பேசிவருகின்றனர்.

தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-04-2014, 12:05.59 PM ]
பசுமையான வாழ்வை நோக்கி என்ற தொனிப்பொருளிலான வாகரைப் பிரதேச இளைஞர் மாநாடு கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
[ Thursday, 24-04-2014, 11:52.49 AM ]
இரணைமடு நீர் விநியோகத்துக்கு கிளிநொச்சி விவசாயிகளும் புத்திஜீவிகளும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக தமது சொற்படி நடந்து கொள்ளும் சில நபர்களை விவசாயிகளாக் காட்டி இலாபம் ஈட்டும் நடவடிக்கையில் அரச சார்புச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
[ Thursday, 24-04-2014, 11:48.33 AM ]
சார்க் நாடுகள் அமைப்பில் இலங்கை மிக முக்கியமான உறுப்பு நாடு எனவும் இலங்கையுடன் வலுவான மற்றும் நிலையான உறவுகளை கொண்டிருக்க விருப்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
[ Thursday, 24-04-2014, 11:28.53 AM ]
மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உட்பட 29 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சிறையதிகாரி ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வட மத்திய மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014, 11:12.26 AM ]
பிரித்தானிய பிரஜை குராம் ஷேக் கொலை செய்யப்பட்டு, அவரது ரஷ்ய காதலியான விக்டோரியா அலஸ்சாண்ட்ரியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 07:36:20 GMT ]
உலகிலேயே மிகவும் அபாயகரமான தொழிலாளாக வங்கதேசத்தில் நடைபெறும் கப்பல் உடைப்பு வேலை என தெரியவந்துள்ளது.
[ Thursday, 24-04-2014 06:44:20 GMT ]
பேஸ்புக் காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவரை மீட்டுத்தரும்படி மனைவி பொலிசியில் புகார் அளித்துள்ளார்.
[ Thursday, 24-04-2014 07:10:50 GMT ]
ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் துடுப்பாடியது கடினமாக இருந்ததாக சென்னை அணியின் அதிரடி வீரர் ஜடேஜா கூறியுள்ளார்.
[ Thursday, 24-04-2014 02:10:29 GMT ]
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்கு பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
[ Thursday, 24-04-2014 08:01:38 GMT ]
கோச்சடையான் படம் வெளி வருவது, புலி வருது புலி வருது என்ற பழ மொழியை ஒண்ணு தான் ஞாபகம் வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.