செய்தி
அழுத்தங்களினால் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றார்! பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்- ஐ.தே.க.
[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 12:36.32 AM GMT ]
மோ்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றமைக்கு சில தரப்புகளிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமா என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கேள்வி எழுப்பியது.

இராணுவ மேஜரின் வழக்குரைஞர் வழக்கை வாபஸ்பெற்றுள்ளதாகவும் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளதாக தென்படுவதாகவும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி அதிகாரி ஒருவரும் இதேபோன்று முறைப்பாட்டை வாபஸ்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சுட்டிக்காட்டினார்.

சமுர்த்தி அதிகாரியின் நிலைக்கு இராணுவ அதிகாரியும் இறங்கிவிட்டாரா என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என அவர் கூறினார்.

அத்துடன், முப்படை பதவி உயர்வுகளிலும் அரசியல் நட்பே ஆதிக்கம் செலுத்துகின்றது. திறமை சேவைக்காலம் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. தம்முடன் நட்பாக இருக்கும் போதே தளபதியாக நியமிக்கப்படுகின்றார்கள்.

போதைவஸ்து வியாபாரிகளும் பாதாள குழுக்களுமே நாட்டை நிர்வகிக்கின்றனர் என்று ஐ.தே.க. எம்.பியான அஜித் பி. பெரேரா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மேஜரான சந்தன பிரதீப் சுசேன என்பவரை இராணுவ சேவையிலிருந்து உடனடியாக நீக்கி விடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 21-04-2014, 06:26.26 AM ]
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகிறது.
[ Monday, 21-04-2014, 06:03.32 AM ]
நாடாளுமன்ற கூட்டங்களை அம்பாந்தோட்டையில் நடத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
[ Monday, 21-04-2014, 05:53.11 AM ]
பொதுபல சேனாவுக்கு டொலர் மற்றும் பவுண்களில் நிதி கிடைத்து வருகிறது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Monday, 21-04-2014, 05:41.28 AM ]
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
[ Monday, 21-04-2014, 05:35.38 AM ]
பட்டிப்பளை கெவிலியாமடுவில் காட்டுயானைகளின் அட்டகாசத்தின் பாதிக்கப்பட்ட இடத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
[ Monday, 21-04-2014 06:41:02 GMT ]
அமெரிக்காவில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளின் உதவியுடன் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
[ Monday, 21-04-2014 06:08:16 GMT ]
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்தில் தோப்புக்கரணம் போட்டாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 21-04-2014 06:25:13 GMT ]
இந்திய அணியின் தொடக்க வீரரான வீரேந்தர் ஷேவாக் தனது திறமையை யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
[ Monday, 21-04-2014 02:25:06 GMT ]
கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Cyanogenmod 11S இயங்குதளத்தில் செயற்படக்கூடிய OnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரையில் அறிமுகமாகவுள்ளது.
[ Sunday, 20-04-2014 13:19:41 GMT ]
லண்டனில் இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்டார் விஜய் நைட் மாபெரும் இசைநிகழ்ச்சி O2 Arena பிரம்மாண்டமான மேடையில் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களோடு நடைபெறவிருக்கின்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 20-04-2014 02:03:03 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறப்பட்டு, நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் மரணத்துடன், வடக்கில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளரும் அறிகுறிகள் தென்படுகின்றன.