செய்தி
13ம் திருத்தச் சட்டமே வடக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைக்கக் காரணம்: டியூ.குணசேகர (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, 02:11.44 AM GMT ]
13ம் திருத்தச் சட்டம் காரணமாகவே வடக்கு- கிழக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைத்தனர் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

 

ஆயுதங்களை ஏந்திய வடக்கு இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டனர். 13ம் திருத்தச் சட்டத்தின் காரணமாகவே இது சாத்தியமானது.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் பலருக்கு இது நினைவில்லை. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையினால் தமிழ் புலம்பெயர் மக்களும், புலி ஆதரவாளர்களுமே அதிகளவில் சந்தோசப்படுவார்கள். பிரபாகரனின் போரை நியாயப்படுத்தும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.

இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்க அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும் - அருன்திக பெர்னான்டோ

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல முடியும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருன்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்க விரோதமான ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நபர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியின் சிலர் எதிர்க்கட்சிகளுக்கு கோசம் எழுப்ப ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்தியாவும் தொடர்புபட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பிணக்குகள் கிடையாது. எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என அருன்திக்க பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

காப்புறுதி பிணைப்பணம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 29-08-2014, 01:50.31 PM ]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், தம்புள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

[ Friday, 29-08-2014, 01:33.36 PM ]
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காது தீர்வு ஏற்படுவதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த கொள்கையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் தெரிவித்தார்.
[ Friday, 29-08-2014, 12:41.06 PM ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் விமானப்படை தளபதி தாஹிர் ராபிக் பட் (Tahir Rafique Butt), பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
[ Friday, 29-08-2014, 12:07.16 PM ]
சமூக ஊடகங்களில் மின்னல் வேகச் செய்திப் பரிமாற்றம் ஐஸ் வாளி (Ice Bucket Challenge) என்ற புதிய சவாலை பல நாடுகளில் பல பிரபலங்கள் மத்தியில் பரப்பியுள்ளது.
[ Friday, 29-08-2014, 11:19.57 AM ]
ஏறாவூரிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற போது, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது மனைவி விடுதலையாகி நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியதாக அவரது கணவர் முஹம்மது கரீம் செய்யது அலி தெரிவித்தார்.
[ Friday, 29-08-2014 07:56:19 GMT ]
நெதர்லாந்து நாட்டில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக மக்கள் நிறைந்த சாலையில் ஓடியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Friday, 29-08-2014 09:17:17 GMT ]
பெங்களூரில் தனது 14 வயது தங்கைக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் அந்த சிறுவன் பொலிசில் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 29-08-2014 12:59:47 GMT ]
ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.
[ Friday, 29-08-2014 11:55:20 GMT ]
பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
[ Friday, 29-08-2014 09:46:06 GMT ]
படத்தை பார்க்கும் முன்னரே அனைத்து மக்களுக்கும் தோன்றும் ஒரு கேள்வி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 28-08-2014 16:43:04 ] []
மன்னாரில் மிக முக்கிய மீன்பிடித்தளங்களில் ஒன்றான சவுத்பார் என்ற மீன்பிடித்துறை தென் பகுதி மீனவர்களுக்கான ஒரு துறையாக மாற்றும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.