செய்தி
(2ம் இணைப்பு)
Photo
யாழ் பல்கலைக்கழகத்தில் வன்முறை - மாணவர்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
[ புதன்கிழமை, 28 நவம்பர் 2012, 07:42.07 AM GMT ]

மாவீரர் நாளான நேற்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், மாணவர் விடுதிக்குள்ளும் படையினர் அத்துமீறி நுழைந்தமையினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். பல்கலை மாணவர்கள் மீது படையினரும், பொலிஸாரும் இணைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 11மணியளவில் மேற்குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வாய்களை கறுப்பு பட்டியால் கட்டிக்கொண்டு, இராணுவத்தின் அராஜகப் போக்கினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த போராட்டத்தை வீதிக்கு கொண்டுவந்து நடத்த முற்பட்டபோது அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த பெருமளவு படையினரும், பொலிஸாரும் திடீரென மாணவர்கள் மீது தடி, இறப்பர் வயர், கம்பிகள் போன்றவற்றால் சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தினர்.

இதில் நிலைகுலைந்த மாணவர்கள் பெருமளவானோர் வளாகத்திற்குள் ஓடி விட, சிலரை வீதியில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இதன் பின்னர் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்தின் பின்னர் அங்குவந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் படையினருடனும், பொலிஸாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து பொலிஸார் மீது மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பொலிஸ் புலனாய்வாளர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக சூழல் மித மிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தால், போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.

இதேவேளை சம்பவத்தின்போது குறித்த பகுதிக்கு வந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் தற்போது பல்கலைக்கழக சூழலில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் வளாகச்சூழில் இராணுவம் குவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் வளாகத்திற்குள் முடக்கப்பட்டிருக்கின்றனர்.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினர் பெண்களின் விடுதிகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து கட்டில்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இந்த மோசமான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.

இந்நாட்டில் சட்டம் என்பது ஒரு பாரதூரமான நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீதித் துறையின் சுயாதீனத் தன்மையானது பாதாளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 01-09-2014, 10:46.46 AM ]
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
[ Monday, 01-09-2014, 10:09.03 AM ]
கிளிநொச்சி சாந்தபுரத்தில் வசித்துவந்த ரெங்கசாமி பீற்றர் என்ற வயோதிபர் வறுமையினால் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்திருந்தார்.
[ Monday, 01-09-2014, 09:49.14 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சஜித் பிரேமதாசவின் அரசியல் ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
[ Monday, 01-09-2014, 09:33.57 AM ]
இலங்கை அரசுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடப்பது போல இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச உலகை ஏமாற்றி வருவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Monday, 01-09-2014, 09:23.09 AM ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Monday, 01-09-2014 10:32:34 GMT ]
பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண மறுக்கும் ரஷ்யாவிற்கு எதிராக, புதிய பொருளாதார தடைகளை கொண்டுவர போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
[ Monday, 01-09-2014 07:46:10 GMT ]
கேரளாவில் அறிவியல் அதியசம் ஒன்று தற்போது உண்மையில் நடந்துள்ளது.
[ Monday, 01-09-2014 07:15:00 GMT ]
இலங்கை அணியிடம் தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்வரும் உலகக்கிண்ண போட்டிகள் கேள்விக்குறியாக அமைந்து விட்டதாக முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
[ Monday, 01-09-2014 06:07:12 GMT ]
அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஓய்வெடுப்பது மிக மிக குறைவாகவே உள்ளது.
[ Monday, 01-09-2014 05:04:35 GMT ]
இயக்குனர் ஷங்கர் நண்பன் படத்திற்கு பிறகு மூன்று வருடங்களாக இயக்கிவரும் திரைப்படம் ஐ.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.