செய்தி
 Video
ஐ.நாவின் இரகசிய அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் அழித்தமை சரியானதே! - ஐ.நாவின் உயரதிகாரி
[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 10:33.46 PM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்தமையை சரி என்கிறார் ஐ.நா அமைப்பின் உயரதிகாரி ஒருவர்.

ஐ.நா. அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி
ஐநாவின் இரகசிய அறிக்கை: முக்கிய பகுதிகள் பல கறுப்பு மையினால் அழிப்பு!

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-10-2014, 03:25.52 AM ]

18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து வெட்கப்படுவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-10-2014, 03:16.44 AM ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கான முயற்சியில் மாதுளுவாவே சோபித தேரர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார்.
[ Thursday, 23-10-2014, 03:11.43 AM ]

தமது கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

[ Thursday, 23-10-2014, 02:42.43 AM ]
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
[ Thursday, 23-10-2014, 02:37.59 AM ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்வதில் அரசாங்கத்துக்கு ஆர்வம் இல்லாதிருப்பதாக பொலிஸ் அதிகாரி நிலாப்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Wednesday, 22-10-2014 12:12:30 GMT ]
சர்வதேச அளவில் வன்முறையால் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாவதாக யூனிசெப் அறிவித்துள்ளது.
[ Wednesday, 22-10-2014 12:23:02 GMT ]
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளின் ரசாயனம் கலந்த புகை குறைந்தபட்சம் 23 நாட்கள் மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-10-2014 08:26:22 GMT ]
இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லியின் கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத சில நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 22-10-2014 11:31:37 GMT ]
சாதாரணமாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
[ Wednesday, 22-10-2014 06:57:28 GMT ]
தமிழ் சினிமாவின் மன்மதன் லிஸ்டில் சிம்பு - அர்யவுக்கும் இடைய கடும் போட்டி நிலவி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-10-2014 05:56:38 ] []
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார்.