செய்தி
பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஐ.நா சிறப்பு பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 03:52.29 AM GMT ]

இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார்.

அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துவதாக தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், இது இலங்கை நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்கிற தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறை குறித்து விடுத்திருக்கும் விரிவான அறிக்கையில், இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்பில் அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில்ரீதியிலான அலுவல்களை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளியார் அழுத்தங்களும் இல்லாமலும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமையும் வகையிலும் செய்யக்கூடிய சூழலை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக இலங்கை அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை என்றும், இதை செய்தவர்கள் அதற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை என்றும் சுயாதீனமான மனித உரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்திருப்பதாகவும் கேப்ரியல் க்னவுல் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக இருப்பதாகவும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், நவம்பர் முதல் தேதி இலங்கை நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் தொடர்பாக தனது சங்கடங்களையும் தெரிவித்திருக்கிறார்.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்ற தன்மை ஆகியவை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகளை பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றும் கேப்ரியல் க்னவுல் கண்டித்திருக்கிறார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 17-04-2014, 09:40.59 AM ]
மத்தல சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கு கூடியிருந்த அரச ஆதரவாளர்கள் சிலர் 'ஹூ' வைத்து கூச்சலிட்டுள்ளதுடன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
[ Thursday, 17-04-2014, 09:39.02 AM ]

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உடனடியாக சிறந்த உளநல மருத்துவரை நாடுவது சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

[ Thursday, 17-04-2014, 08:33.04 AM ]
அமெரிக்கா கூறுவது போல் நல்லிணக்க செயற்பாடுகளை ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
[ Thursday, 17-04-2014, 08:05.33 AM ]
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற நிறைவேற்றப்படும் போது அந்த நாட்டுடன் முழுமையான இராணுவ தொடர்புகள் ஆரம்பமாகும் என்று ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
[ Thursday, 17-04-2014, 07:45.39 AM ]
ஏ–9  வீதியில் கிளிநொச்சி, திருமுருகண்டியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த இராணுவ வாகனமொன்று நேற்று புதன்கிழமை 11.30 மணியளவில குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 13 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
[ Thursday, 17-04-2014 06:49:09 GMT ]
பொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை, மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 17-04-2014 06:00:31 GMT ]
ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக விரோதிகள் 3 பேர் நடுரோட்டில் வைத்து பெண்ணின் ஆடையை கிழித்த அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.
[ Thursday, 17-04-2014 06:16:38 GMT ]
ஐ.பி.எல் 7வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கிய நிலையில், அங்கு நிலவும் தட்பவெப்ப சுழலுக்கு ஏற்ப விளையாடுவதே முதல் சவால் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
[ Thursday, 17-04-2014 04:52:52 GMT ]
Vivo நிறுவனம் 24 மெகாபிக்சல்களை உடைய அதிக வினைத்திறன்கொண்ட கமெராவினை உள்ளடக்கியதாக Xshot எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
[ Thursday, 17-04-2014 06:30:57 GMT ]
இயக்குனர் சிம்புதேவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 01:56:57 ]
சிங்களதேசமே !இந்த உலகிலே ஒருமனிதன் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவது தவறு என்று உலகின் எந்த நாட்டின் சட்டங்களாவது சொல்கின்றதா? எந்த ஒரு தனிமனிதனும் சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுவது தவறு என்று அந்த கண்மூடிய புத்தபிரான் என்றாவது உனக்கு சொன்னாரா?