செய்தி
(2ம் இணைப்பு)
Photo
109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவு! ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது! - மேஜர் ஜெனரல் உதய பெரேரா
[ சனிக்கிழமை, 17 நவம்பர் 2012, 10:04.49 AM GMT ]
இலங்கை ராணுவத்துக்கு வடக்கின் தமிழ் பெண்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் மிக சிறப்புற இடம்பெற்றுள்ளது.

இதன்போது 109 தமிழ்ப் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பாதுகாப்பு படையணி தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ளுமுகமாக வட மாகாணத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் தமது பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை ராணுவத்தின் தொழிற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இவர்கள், ராணுவ மகளிர் படையின் 6 ஆவது படையணியின் கீழ் செயற்படவுள்ளனர்.

குறித்த பெண்களுக்கு ராணுவ ஆயுதப்பயிற்சி வழங்கப்பட மாட்டாதெனவும், ராணுவத்தில் உள்ள 105 ற்கும் மேற்பட்ட தொழிற்றுறைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

35 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட சம்பளமும், மேலதிக கொடுப்பனவும், இலவச சீருடை, போக்குவரத்து வசதி, திருமணத்தின் பின்னரான விடுமுறை சலுகை, பிள்ளைகளை தேசிய
பாடசாலைகளில் இணைத்தல், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல வசதிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் யுவதிகளை ராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் கடந்த வாரங்களில் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த 109
பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் 2000 தமிழ் பேசும் அதிகாரிகளை பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளும் செய்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பொரும்பாலானவர்கள் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் பாதுகாப்புப் படையில் நிலவும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 5000 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன,

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவோர் விவசாய திட்டங்கள் மற்றும் அபிவருத்தி நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படுவர்.

இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 1500 புனர்வாழ்வளிகப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 30-10-2014, 01:38.00 PM ]
வைத்திய கல்வியினை தனியார் மயப்படுத்தும் முகமாக மாலபே கல்வி மையத்தினை இலங்கை வைத்திய சங்கத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் இலங்கை வைத்திய சங்கமும் மேற்கொள்வதை கண்டித்து கிழக்கு பல்கலைக் கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
[ Thursday, 30-10-2014, 01:13.19 PM ]
கொஸ்லாந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
[ Thursday, 30-10-2014, 12:45.10 PM ]
உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உட்கட்டுமாண திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கும்மேல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருக்கும் த.தே.கூட்டமைப்பு, கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Thursday, 30-10-2014, 12:31.11 PM ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
[ Thursday, 30-10-2014, 11:53.17 AM ]

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவகலை தோட்டப் பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் 80ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேரை தங்ககலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

[ Thursday, 30-10-2014 12:04:47 GMT ]
சிரியாவில் முப்பது பேரை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
[ Thursday, 30-10-2014 07:46:55 GMT ]
ஜெய்ப்பூர் சுற்றுலா சென்றாலே அதனை நாம் ராஜ சுற்றுலா என்று தான் சொல்ல வேண்டும்.
[ Thursday, 30-10-2014 07:36:06 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனி, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என ஐசிசி தலைவர் என் சீனிவாசன் கூறியுள்ளார்.
[ Thursday, 30-10-2014 07:31:25 GMT ]
உணவு வகைகளில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே கருவேப்பிலை சேர்க்கப்படுவதாக பலரும் கருதுகிறோம்.
[ Thursday, 30-10-2014 01:56:52 GMT ]
சாம் அவர்களின் இசையில் கிளியோபாட்ரா அவர்கள் பாடியிருக்கும் பாடல் அகம் புறம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 30-10-2014 02:46:07 ] []
இலங்கை வரலாற்றில் மலையக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.