செய்தி
(4ம் இணைப்பு)
Photo
அதிரடி படையினர் - கைதிகள் மோதல்: 13 பேர் பலி! பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012, 12:00.18 PM GMT ]
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட படையினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 13 கைதிகள் வரை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் சிங்களக் கைதிகள். தமிழ்க்கைதிகளுக்கு எதுவித பாதிப்புமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று மாலை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கோபமுற்ற கைதிகள் குறித்த படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடபட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு அது பின்னர் கலவரமாக மாறியுள்ளது.

இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் போக்குவரத்து தடை

வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பேஸ் லைன் வீதியின் பொரளை முதல் தெமட்டக்கொட வரையிலான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

சிறைசாலைக்குள் இருக்கும் கைதிகள் வீதியை நோக்கி கல்வீச்சு தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்திலேயே இந்தப்பாதை மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு விட்டு விசேட அதிரடிப் படையினர் திரும்பும் போது கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.

இதன்போது எவருக்காவது சேதங்கள் ஏற்பட்டதா என்பதை அறியமுடியவில்லை.

மூன்றாம் இணைப்பு:

தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள்இ அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் படுகாயம்

வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பிரதிப் பொலிஸமா அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார்.

கைதிகள் கற்களையும் ஏனைய பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன, கெழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடைச் சிறைச்சாலை கலகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

வெலிக்கடைச் சிறைச்சாலை கலகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையிலான மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 40பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமைக் கவலைக்கிடம் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 11 அதிகாரிகள் காயடமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து கைதிகளும், சிறைச்சாலை அதிகாரிகளும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவம் பாரிய கலகமாக வெடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடைச் சிறைச்சாலையை அண்டிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில கைதிகள் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

4ம் இணைப்பு

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் 13 கைதிகள் மரணம். 45 பேர் காயம். 11 விசேட அதிரடிப்படையினரும் காயம்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட படையினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 13 கைதிகள் வரை கொல்லப்பட்டனர்.

படையினரின் துப்பாக்கி சூட்டிலேயே கைதிகள் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 45 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 13 பேரே கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 11 விசேட அதிரடிப்படையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிங்கள கைதிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று மாலை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கோபமுற்ற கைதிகள் குறித்த படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர் அது மோதலாக மாறியது.

இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்ட பின்னரே இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த கட்டளையதிகாரி பிரதி பொலிஸ் அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார்.

அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சத்திரசிகிச்சைக்கு உட்படு;த்தப்பட்டுள்ளார்

எனினும் இந்த சம்பவங்களில் தமிழ்க் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 20-09-2014, 05:31.37 AM ]
கட்சியில் தலைவர் முதற்கொண்டு ஆளாளுக்கு அடித்துக் கொள்ளும் ஒரே கட்சி ஐ.தே.க என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன கிண்டல் செய்துள்ளார்.
[ Saturday, 20-09-2014, 05:25.33 AM ]

தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் 1985ம் ஆண்டு தமிழக அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள் நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

[ Saturday, 20-09-2014, 05:25.23 AM ]
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக மறந்து விட்டதாக மவ்பிம சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 20-09-2014, 05:00.10 AM ]
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் சமந்த வித்தியாரத்தினவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
[ Saturday, 20-09-2014, 04:39.13 AM ]
தற்போது நடைமுறைபடுத்தப்படும் அகதிக் கொள்கை காரணமாக ஒரு மாதத்துக்கு ஒரு அகதிகள் படகினை வந்த பாதை வழியாகவே அனுப்பி வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 20-09-2014 04:37:10 GMT ]
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 19-09-2014 10:53:11 GMT ]
இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்துள்ளார்.
[ Saturday, 20-09-2014 04:37:24 GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது சம்பியன் லீ ரி-20 சுற்றுத்தொடரில் கேப் கோப்ராஸ் அணியை எதிர்கொண்ட நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
[ Saturday, 20-09-2014 03:55:19 GMT ]
சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியாகிய iPhone 6 இனை அறிமுகம் செய்திருந்தது.
[ Saturday, 20-09-2014 01:23:59 GMT ]
அஜித் பற்றி நாளுக்கு நாள் எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே தான் இருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 18-09-2014 06:49:44 ] []
சீனா ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் வரவேற்பு வைபவம் இலங்கையில் அரசியல் தலைவர்களின் உணர்வு உணர்ச்சி பொங்கியதாக (16ம், 17ஆம் திகதி பிற்பகல் வரை) இருந்தது.