செய்தி
உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 12:53.28 AM GMT ]
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது.

மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில்,

உலகம் நாளை (இன்று) அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.

அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.

இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை.

இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 22-08-2014, 11:20.34 AM ]
புத்தளம் முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து இந்துக்கள், பௌத்தர்கள் முன்னேஸ்வரம் செல்கின்றனர்.
[ Friday, 22-08-2014, 11:16.11 AM ]
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த கணிசமான தமிழர்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மதரஸா வகையிலான போதனை பாடசாலைகளை நடத்தி வருவதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரிசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Friday, 22-08-2014, 11:04.03 AM ]
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உத்தரவிட்டு உதவிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது.
[ Friday, 22-08-2014, 10:35.00 AM ]
ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
[ Friday, 22-08-2014, 10:17.46 AM ]
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீர் வெறுப்பு நோய் சிகிச்சை நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Friday, 22-08-2014 07:33:51 GMT ]
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
[ Friday, 22-08-2014 07:49:30 GMT ]
சென்னை நகரத்தின் 375 ஆண்டுகள் பழமையான பெருமையை நினைவுகூரும் வகையில் இன்று சென்னை தினம் (மெட்ராஸ் டே) கொண்டாடப்படுகிறது.
[ Friday, 22-08-2014 10:37:40 GMT ]
சீனாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் ஒன்றினைப் வென்றுள்ளது.
[ Friday, 22-08-2014 05:42:17 GMT ]
வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்.
[ Friday, 22-08-2014 07:26:12 GMT ]
தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 21-08-2014 02:52:20 ]
கிழக்கு மாகாண முஸ்லிம்களை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரசால் அநாதைகளாக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே மு.கா. அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் சுயநலம் கொண்ட ஹக்கீம் கம்பனியால் ஏலம் போட்டு மொத்த விலைக்கு விற்கப்பட்டு விட்டன.