செய்தி
யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 03:18.16 AM GMT ]

யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும், போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-10-2014, 12:56.04 AM ]
ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரதன தேரரின் 19ம் திருத்தச் சட்ட யோசனையை ஆதரிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-10-2014, 12:46.14 AM ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது நீர்கொழும்பு தொகுதியில் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவுள்ளதாக மாகாண அமைச்சர் நிமல் லான்சா சபதம் செய்துள்ளார்.
[ Saturday, 25-10-2014, 05:02.55 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமாகாண மீன்பிடி அமைச்சினால் அக்கராயன் மற்றும் வன்னேரிக்குளம் ஆகியவற்றில் நன்னீர் மீன் குஞ்சுகள் நேற்றைய தினம் விடப்பட்டுள்ளன.
[ Saturday, 25-10-2014, 04:59.59 PM ]
யாழ்ப்பாண மக்கள் தன்னை நேசிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014, 04:44.41 PM ]
யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியான கனமழை பெய்துவரும் நிலையில் இன்றைய தினம் யாழ்.கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்தின் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் கோபுரத்திலிருந்த சிலைகள் உடைந்து வீழ்ந்துள்ளதுடன், கோபுர கலசமும் காணாமல்போயுள்ளது.
[ Saturday, 25-10-2014 12:30:33 GMT ]
ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-10-2014 12:07:47 GMT ]
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டுள்ளனர்.
[ Saturday, 25-10-2014 08:07:28 GMT ]
டோனி சிறப்பாக செயல்பட்டாலும், எனக்கு கங்குலி தான் பிடித்த அணித்தலைவர் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
[ Saturday, 25-10-2014 12:04:31 GMT ]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சூரிய ஒளிப்பட்டாலே உடல் கருத்துவிடும் என எண்ணி முக்காடு போட்டுக்கொள்கின்றனர்.
[ Saturday, 25-10-2014 03:03:16 GMT ]
கத்தி திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-10-2014 09:07:40 ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதொன்றாக சிறுபான்மை மக்களுக்கு அமையப் போகின்றது என்பது சகலருக்கும் தெரியும்.