செய்தி
மாணவர்களை விடுவிக்குமாறு துணைவேந்தர் யாழ். தளபதியிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 04:46.38 PM GMT ]

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட அதேவேளை மாணவன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யக் கோரியே இன்று மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மாணவர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் மாணவன் எங்கே என தாயாரிடம் விசாரித்துள்ளனர். இது தொடர்பில் தகவலறிந்த மாணவர்கள், இது தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் காவலரண்களை அகற்றுமாறும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தினர் நுழைவதையும் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-10-2014, 11:51.10 PM ]
தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 11:36.54 PM ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டுமென பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 11:27.47 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 21-10-2014, 11:09.18 PM ]
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பிலும் பாப்பரசர் பிரான்ஸிஸ்சின் வருகை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க தேவாலயம் இலங்கை அரசாங்கத்திடம் தெளிவை கோரியுள்ளது
[ Tuesday, 21-10-2014, 11:03.24 PM ]
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியமை மற்றும் மீன் இறக்குமதியை தடைசெய்யவுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி,  ஐரோப்பிய தூதுவர் டேவிட் டேலியுடன் பேச்சு நடத்தியுள்ளது.
[ Tuesday, 21-10-2014 13:14:18 GMT ]
தீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Tuesday, 21-10-2014 12:57:47 GMT ]
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில் அங்கு `அம்மா மொபைல்’ தயாரிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
[ Tuesday, 21-10-2014 10:18:09 GMT ]
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-10-2014 12:18:59 GMT ]
இன்றைய காலத்தில் இளைஞர்களின் பெரிய பிரச்னையாக இருப்பது இளநரை.
[ Tuesday, 21-10-2014 01:33:12 GMT ]
கத்தி பிரச்சனையில் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் விஜய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.