செய்தி
 Photo
மிருகங்களை விட கேவலமாக நடத்தும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள்: சிறீதரன் எம்பியிடம் கண்ணீர் மல்கிய மருதநகர் மக்கள்!
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 08:27.42 AM GMT ]
நிம்மதியாக வாழ ஒரு துண்டு காணியும், அரை நிரந்தர வீடும் கேட்டதற்காக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தம்மை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்துவதாக பன்னங்கண்டி மக்கள் கண்ணீர் மல்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனிடம் கூறியுள்ளனர்.

கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பன்னங்கண்டி- மருதநகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமாக ஒரு காணியும், வீடும் இல்லாத நிலையில், வயல் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதும் 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.

அங்கு அவர்கள் தொடந்து தெரிவிக்கையில்,

ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் காணி பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி தமது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். புதிய கட்டிடங்கள் திறப்பதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் காணி கொடுப்பதற்கான பதிவு என்ற பெயரில் பேருந்துகளில் அழைத்துச் சென்றுவிட்டு அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கைவிட்டு விடுகிறார்கள்.

இறுதியில் காணியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் நடந்து ஊர் திரும்புகின்றோம். இதுவே கடந்த 3வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு அரைநிரந்தர வீடு கொடுங்கள் எனக் கேட்டால் பிரதேச செயலர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு கணவன்மார் இல்லையா? அவர்கள் எங்கே என்று?

அதுபோதாதென்று கதைக்கப்பேச தெரியாதவர்கள் என்றும், யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாது என்றும் மிகவும் கேவலமான முறையில் மக்களுக்கு மத்தியில் வைத்து திட்டியனுப்புகின்றார்.

இந்த நிலையில் ஒரு வீடு கேட்டதற்காக மிருகங்களை விடயும் மோசமாக நடத்தப்படுகின்றோம். அரசியல் வாதிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்,  காணி கேட்டால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் டோக்கன் தருகிறார்கள். 15 நாட்களில் வீடு தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இன்றுவரை 3 வருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றத்தின்போது கொடுத்த தறப்பாள் கூடாரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் யாரிடம் செல்வது, எமது வேதனைகளை தீர்க்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் கடும் மழை, சேறு, சகதிகளுக்குள்ளும் வெயிலுக்குள்ளும் வருடத்துக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்து கொண்டு விலங்குகளிலும் பார்க்க மோசமான நிலையில் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் குறித்து தம்மால் முடிந்த உதவிகளை மிகவிரைவில் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 25-04-2014, 05:57.14 AM ]
சட்டவிரோதமாக வல்லப்பட்டை மரத்தின் கிளைகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் மஸ்கெலியா, பிரவுண்ஸ் தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
[ Friday, 25-04-2014, 05:56.45 AM ]
 எனது மகன் விடுதலைக்கு இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 25-04-2014, 05:49.44 AM ]
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மௌமுன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
[ Friday, 25-04-2014, 05:46.30 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
[ Friday, 25-04-2014, 05:38.49 AM ]
16 புலம்பெயர் தமிழ் அமைப்­புக்களுடன் 424 புலம்­பெயர் தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு பட்­டி­ய­லி­டப்­பட்­ட­மை­யா­னது, அவர்­களை கைது செய்­வ­தற்­கான அறி­வித்­தலோ அல்­லது தடை உத்­த­ரவோ கிடை­யாது என இராணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய தெரி­வித்தார்.
[ Friday, 25-04-2014 05:01:43 GMT ]
சீனாவின் தெற்கிலுள்ள குவான்ஸூ நகரில் அமைக்கப்படும் வானளாவிய கட்டடத்தில் மணிக்கு 72 கிலோ மீற்றர் வேகத்தில் நகரக்கூடிய லிப்ட் இயந்திரத்தைப் பொருத்தப் போவதாக ஹிட்டாச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Friday, 25-04-2014 04:18:45 GMT ]
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திரமோடிக்கு தனது பதவியைப் பற்றி மட்டுமே கவலை, மக்களைப் பற்றிக் கவலையில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
[ Thursday, 24-04-2014 12:46:14 GMT ]
ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார்.
[ Friday, 25-04-2014 03:11:27 GMT ]
சமூக வலைத்தளங்களுள் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் 2014ம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருவாய் தொடர்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
[ Thursday, 24-04-2014 14:44:22 GMT ]
கேரளாவின் மெகாஸ்டார் மம்மூட்டி படப்பிடிப்பின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 24-04-2014 15:09:45 ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ