செய்தி
அமெரிக்கர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி! தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 09:13.50 AM GMT ]

அமெரிக்கர்களுக்கு இலங்கை வரத் தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட  முற்பட்'டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையாக சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,

இலங்கையைச் சிதைப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு இடமளிக்கப் போவதில்லை.

கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. குறிப்பாக ஐநாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.

இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.

சீனாவுடன் இலங்கைக்கு நல்ல நட்புறவு உள்ளது.

எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும். அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-10-2014, 04:59.47 PM ]
கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதரக அதிகாரியாக மொஹான் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 04:33.44 PM ]
இவ்வாண்டின் தீபாவளித் திருநாளானது, அனைத்து இந்து தமிழ் மக்களின் வாழ்வில் சந்தோஷ ஒளி வீசும் நன்னாளாக மலர இறைவனை பிரார்த்தித்து மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சார்பிலும் தனது சார்பிலும் நல்வாழ்த்து கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 04:02.21 PM ]
விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் 2006ம் ஆண்டுத் தடையானது முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளதென தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 03:06.44 PM ]
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
[ Tuesday, 21-10-2014, 02:46.04 PM ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் நற்பெயரை உயர்த்தும் பிரச்சார நடவடிக்கைகள், இந்திய பிரச்சார நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
[ Tuesday, 21-10-2014 13:14:18 GMT ]
தீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Tuesday, 21-10-2014 12:57:47 GMT ]
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில் அங்கு `அம்மா மொபைல்’ தயாரிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
[ Tuesday, 21-10-2014 10:18:09 GMT ]
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-10-2014 12:18:59 GMT ]
இன்றைய காலத்தில் இளைஞர்களின் பெரிய பிரச்னையாக இருப்பது இளநரை.
[ Tuesday, 21-10-2014 01:33:12 GMT ]
கத்தி பிரச்சனையில் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் விஜய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.