செய்தி
(2ம் இணைப்பு)
 
இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் உள்ளது!- நவநீதம்பிள்ளை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 06:23.50 AM GMT ]
இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், ஆம், இலங்கைக்கு செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.

சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை, பதவியில் இருந்து விலக்கிய குற்றவியல் செயற்பாடு நாட்டின் சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, குற்றவியல் செயற்பாட்டின் போது, பிரதம நீதியரசருக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-10-2014, 11:37.01 AM ]

சுவிஸ் அன்பேசிவம் சூரிச் சிவன்கோவில் சைவத்தமிழ் சங்கம் ஊடாக சுவிஸ் கிறங்கன் சொலத்தூண் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கிளிநொச்சி பரந்தன் காஞ்சிபுரம் மக்களுக்கு தலா ஒவ்வொருவருக்கும் ரூபா 4 ஆயிரம் பெறுமதியான உடுபுடவைகள் உலர்உணவு  அடங்கிய பொதிகளை வழங்கியுள்ளது.

[ Friday, 24-10-2014, 11:33.31 AM ]
நீதியான சமூகத்திற்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரரும், தூய்மையான நாளை அமைப்பின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரரும் கைகோர்த்துள்ளார்கள்.
[ Friday, 24-10-2014, 11:19.50 AM ]
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்வைப்பு இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்தார்.
[ Friday, 24-10-2014, 11:15.17 AM ]
கனடாவின் உள்ளூர் பயங்கரவாதத்தின் வளர்ச்சியால் ஒரு வாரத்திற்குள் இரண்டு படை வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வானது, கனடாவின் ஆட்சியமைப்புக்களில் பயங்கரவாதம் பற்றிய பார்வையை கடுமையாக்கியுள்ளது.
[ Friday, 24-10-2014, 10:40.04 AM ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
[ Friday, 24-10-2014 11:22:25 GMT ]
இறந்து போன இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
[ Friday, 24-10-2014 06:30:48 GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-10-2014 06:50:19 GMT ]
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா எனக்கு ரோல் மொடலாக இருக்கிறார் என்று இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-10-2014 10:18:57 GMT ]
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளை பொறுத்து தான் உங்களது உடல்நலனும், அழகும் அமையும்.
[ Friday, 24-10-2014 03:25:25 GMT ]
நிருஷாந்த் அவர்கள் இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் குறும்படம் ரத்தச்சுவடு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.