செய்தி
 Video
“எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கு”! திருப்பதியில் மகிந்த ராஜபக்ச பெருமிதம்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:35.31 AM GMT ]

தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று இந்தியாவிற்கு சென்றிருந்தார். ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன.

இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் சென்ற ஜனாதிபதி புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து கொழும்புக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 23-04-2014, 12:36.05 PM ]

தமிழ் இளைஞர்களின் கழுத்தில் மீண்டும் சயனைட் குப்பிகளை தொங்கவிடுவதே சுமந்திரன் போன்றோரின் தேவை என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 23-04-2014, 11:36.32 AM ]
சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென் மீன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
[ Wednesday, 23-04-2014, 11:30.02 AM ]
அம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவத்தை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக தேசிய சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
[ Wednesday, 23-04-2014, 10:51.30 AM ]
நாட்டின் இன்றைய சர்வாதிகார அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு மக்களின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவே ஜே.வி.பி போராடி வருவதாக அந்த கட்சியின் மேல் மாகாண சபையின் குழுத் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 23-04-2014, 10:21.10 AM ]
ஜேம்ஸ் பெக்கர், ரவி விஜேரத்ன போன்றவர்களின் கசினோ வர்த்தகத்திற்கு அரசாங்கம் முழுமையான வரிச்சலுகை வழங்கி செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கூறினார்.
[ Wednesday, 23-04-2014 09:16:46 GMT ]
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்ப்பது என்றாலே தனி அழகு தான்.
[ Wednesday, 23-04-2014 07:46:44 GMT ]
இந்தியாவிலேயே உயரமான மனிதர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார்.
[ Wednesday, 23-04-2014 07:47:32 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான பிராவோ காயம் காரணமாக வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
[ Wednesday, 23-04-2014 01:47:08 GMT ]
Sony நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Xperia M2 Dual இனை இம்மாதம் 25ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
[ Wednesday, 23-04-2014 07:35:45 GMT ]
வேட்டை வெற்றி படத்தை தொடர்ந்து லிங்குசாமி, சூர்யாவை வைத்து இயக்கம் படம் அஞ்சான் .
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.