செய்தி
யாழில் செய்தித்தாள் விநியோகிக்கச் சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:08.35 AM GMT ]

யாழ்.தினக்குரல் செய்தித்தாள் விநியோகஸ்தர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில நாட்களேயாகும் நிலையில், தொடர்ந்தும் பத்திரிகை விநியோகஸ்தர்களை படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த 7ம் திகதி பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தியில் வைத்து சி.சிவகுமார் என்ற விநியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்டு தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் அதிகாலையில் செய்தித்தாள் விநியோகத்திற்குச் சென்ற நபர்களை முழுதாக முகத்தை மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்த நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பியோடிய விநியோகஸ்தர்கள் பொதுமக்களின் வீடுகளில் ஒழிந்திருந்து விட்டு அதிகாலையே செய்தித்தாள்களை விநியோகித்துள்ளனர்.

இதேபோல் அதிகாலையில் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவும், முகத்தை முழுதாக மறைத்திருந்த நபர்கள் சிலர் வழக்கத்திற்கு மாறாக நடமாடியுள்ளனர்.

எனவே யாழ்.மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது என யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 17-09-2014, 03:06.45 PM ]
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டிருக்கிறோம்.
[ Wednesday, 17-09-2014, 02:55.47 PM ]
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 17-09-2014, 02:06.19 PM ]
புத்தளத்தில் இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த நபருக்கு புத்தளம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 17-09-2014, 01:56.48 PM ]
ஊவாமாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட்ட சிலர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் செந்தில் தொண்டமான் காயமடைந்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014, 01:28.40 PM ]
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் விருப்பத்தை கொண்டுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014 12:49:09 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போர் தீப்பிழம்புகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ள பிரசார காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 17-09-2014 08:48:20 GMT ]
எனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014 08:28:31 GMT ]
சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 5 தொடரிலும் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை மேற்கிந்த அணிகளின் பன்முக வீரர் கிரண் பொல்லார்ட் பெற்றுள்ளார்.
[ Wednesday, 17-09-2014 11:52:12 GMT ]
உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.
[ Wednesday, 17-09-2014 07:55:53 GMT ]
எஸ்.2.ஹோம் தயாரிப்பில் சிட்னி பிரசாத் இசையமைத்து நடித்திருக்கும் பாடல் வெற்றியின் ரகசியம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 17-09-2014 05:49:08 ]
இலங்கையின் தற்போதைய ஆளும் அரசு தனக்கு துணையான அடிப்படைவாத சிங்கள பெளத்த அமைப்புக்களுடனும், அடிப்படைவாத சிங்கள இனத்தின் பெயரில் அரசியலை நடாத்தும் கட்சிகளுடனும் ,சிறுபான்மை ,சுயநல பதவி ஆசைகொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டணியிலேயே காலத்தை நீடிக்கின்றது.