செய்தி
(2ம் இணைப்பு)
Photo
இலங்கை அரசின் அடாவடித்தனம்!-சுயாதீன விசாரணை கோரி ஜெனீவாவில் வெள்ளம் போல் திரண்ட மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 12:18.51 AM GMT ]

இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி ஜெனீவா புகையிரத நிலைய சந்தியில் இதுவரை காணாத பல்லாயிரம் மக்கள் உலகின் பல பாகங்களிலுமிருந்து திரண்டனர்.

இங்கு கலந்து கொண்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ், இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.

இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு மருத்துவ பேராசிரியர் தாயப்பன் கலந்து கொண்டதுடன், கனடா நாட்டின் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழருக்காக குரலுமான ஜிம் கரியானஸ் வழங்கிய தனதுரையில்,

தமிழர்களாகிய உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்பதில் மிகுந்த மகிழ்சி அடைகிறேன். இலங்கையரசின் இனப் படுகொலையை உங்களோடு இணைந்து நாமும் எதிர்க்கிறோம். அந்த அரசு தொடர்ந்து இந்த நிமிடம் வரை தமிழர்கட்கு இன்னல்களையே செய்து வருகிறது.

இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் தெரியாத இவ் அரசிற்கு ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் செயற்பாடுகளில் கண்ட கணவுள்ள படு தோல்விகளை இச் சிறிலங்கா அரசு நன்கறியும்.

இந்நிலை நீடிக்குமானால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் என்றும் எம் உறவுகளாம் உங்களின் போராட்டத்திற்கு எம் தார்மீக ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு மாநகர சபை உறுப்பினர்கள், இத்தாலி நாட்டு மனித உரிமை ஆர்வலர், பல நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் நாட்டு உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 22-07-2014, 07:11.15 AM ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் வழக்கு இன்று உச்ச நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
[ Tuesday, 22-07-2014, 06:52.27 AM ]

பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

[ Tuesday, 22-07-2014, 06:13.03 AM ]
இஸ்ரேலின் காஸா மீதான இனப்படுகொலையை விவாதித்தது போல இலங்கையின் ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்தும் ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் கனிமொழி ஆகியோர் வலியுறுத்தினர்.
[ Tuesday, 22-07-2014, 05:54.33 AM ]
இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
[ Tuesday, 22-07-2014, 04:47.19 AM ]
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
[ Tuesday, 22-07-2014 05:53:21 GMT ]
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த சிறுமி ஒருவரின் தந்தை ரஷ்ய ஜனாதிபதி புதினிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
[ Tuesday, 22-07-2014 06:45:23 GMT ]
அதிமுகவின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா நபிகள் நாயகம் போதனைகளை அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்தியா அமைதிப்பூங்காவாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 22-07-2014 05:18:01 GMT ]
லண்டன் லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார்.
[ Tuesday, 22-07-2014 06:40:56 GMT ]
பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் பாரிய குழி ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 21-07-2014 15:21:17 GMT ]
பாலிவுட் திரையுலகில் பல பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் ஹிரித்திக் ரோஷன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 21-07-2014 15:24:37 ]
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.