செய்தி
பொதுநலவாய நாடுகளின் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகளையும் அனுப்பப் போவதில்லை!- கனடா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 11:51.33 AM GMT ]
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது.

எனினும், மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முழு அளவிலான பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைக்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனடா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய வெளிவிவகார திணைக்களத்தின் எமா வெல்போர்ட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலையில் முழு அளவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் பங்கேற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பாரிய யுத்தக் குற்றச் செயல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம் ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 17-04-2014, 12:34.39 PM ]
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக இண்டர்போல் பொலிஸார் வெளியிட்டிருந்த சிகப்பு பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 17-04-2014, 11:48.10 AM ]
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை நிறுவனம் 2013 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 860 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 17-04-2014, 11:38.03 AM ]
வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மந்த புத்தியான இரண்டு கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
[ Thursday, 17-04-2014, 11:27.17 AM ]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

[ Thursday, 17-04-2014, 11:03.48 AM ]
புத்தாண்டு தினத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தில் வழிபட்ட போது பூஜைக்கு கொள்வனவு பூஜைத் தட்டில் அழுகிய பழங்கள் இருந்தன என்று முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 17-04-2014 11:02:53 GMT ]
தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார்.
[ Thursday, 17-04-2014 07:47:55 GMT ]
குஷ்புவின் தீவிர பிரசாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
[ Thursday, 17-04-2014 10:07:20 GMT ]
ஐ.பி.எல் சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தனித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 17-04-2014 04:52:52 GMT ]
Vivo நிறுவனம் 24 மெகாபிக்சல்களை உடைய அதிக வினைத்திறன்கொண்ட கமெராவினை உள்ளடக்கியதாக Xshot எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
[ Thursday, 17-04-2014 12:30:30 GMT ]
சமீபத்தில் பார்த்திபனால் வெளிவந்த அமலாபால், இயக்குனர் விஜய்யின் காதல் செய்தி தற்போது உறுதியாகிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 17-04-2014 01:56:57 ]
சிங்களதேசமே !இந்த உலகிலே ஒருமனிதன் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவது தவறு என்று உலகின் எந்த நாட்டின் சட்டங்களாவது சொல்கின்றதா? எந்த ஒரு தனிமனிதனும் சுயமரியாதையுடன் வாழ ஆசைப்படுவது தவறு என்று அந்த கண்மூடிய புத்தபிரான் என்றாவது உனக்கு சொன்னாரா?