செய்தி
30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 11:30.46 AM GMT ]

தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்' என்று மேலும்  கூறியுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 25-04-2014, 01:54.08 AM ]
இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது.
[ Friday, 25-04-2014, 01:37.34 AM ]
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 25-04-2014, 01:16.09 AM ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளை தடை செய்தமை மற்றும் 424 நபர்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடை விதித்தமைக்கான சான்றுகள் உள்ளன என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
[ Friday, 25-04-2014, 12:39.42 AM ]
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Friday, 25-04-2014, 12:29.55 AM ]
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள் தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை  தீர்ப்பு அளிக்கவுள்ளது.
[ Thursday, 24-04-2014 07:36:20 GMT ]
உலகிலேயே மிகவும் அபாயகரமான தொழிலாளாக வங்கதேசத்தில் நடைபெறும் கப்பல் உடைப்பு வேலை என தெரியவந்துள்ளது.
[ Thursday, 24-04-2014 13:26:21 GMT ]
வரதசட்சணை பாக்கிக்காக கணவனுக்கு கிட்னி கொடுத்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
[ Thursday, 24-04-2014 12:46:14 GMT ]
ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார்.
[ Thursday, 24-04-2014 02:10:29 GMT ]
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்கு பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
[ Thursday, 24-04-2014 14:44:22 GMT ]
கேரளாவின் மெகாஸ்டார் மம்மூட்டி படப்பிடிப்பின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சுடச்சுட மட்டன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 24-04-2014 15:09:45 ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இம்முறை இணைத் தலைமையின் கீழ் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளதால் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது. ெ