செய்தி
கிளிநொச்சியில் படையினரின் ஏற்பாட்டில் அழகு ராணிப் போட்டி!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சமூக ஆர்வலர்கள்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 05:02.23 PM GMT ]
கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை (11.4.2013) கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இங்கு நாளை வியாழன் இரவிரவாக பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது.

மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம்.

இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-04-2014, 02:19.21 AM ]
இணைய விளம்பரங்களின் மூலம் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 24-04-2014, 01:54.31 AM ]
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்!
[ Thursday, 24-04-2014, 01:08.14 AM ]
அரசாங்கம் நாட்டை காக்காவிட்டால் அரசாங்கத்த பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-04-2014, 01:03.22 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுமாறு சோசலிச கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன.
[ Thursday, 24-04-2014, 12:50.44 AM ]
நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பௌத்த பிக்குகள், துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-04-2014 01:59:30 GMT ]
பிரேசில் தனியார் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள், அங்கிருந்த பஸ்களுக்கு தீ வைத்துள்ளனர்.
[ Thursday, 24-04-2014 01:31:02 GMT ]
டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விகாரில் உள்ள புகழ்பெற்ற பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் மீது பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ Wednesday, 23-04-2014 13:06:19 GMT ]
ஐதராபாத் அணியின் மோசமான களத்தடுப்பால் அணி தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என ஐதராபாத் அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
[ Thursday, 24-04-2014 02:10:29 GMT ]
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உடல் ஆரோக்கியத்தினை பேணுவதற்கு பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
[ Wednesday, 23-04-2014 13:51:40 GMT ]
கௌதம் மேனன் தற்போது அஜித்தை வைத்து எடுக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட எகிறி கொண்ட போகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.