செய்தி
 Photo
வெளிநாட்டிலிருந்து போலிப் பிரசாரம் செய்வோர் நேரில் வந்து உண்மையை அறிய வேண்டும்! - கோத்தபாய
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 08:29.30 PM GMT ]
தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கை வந்து உண்மை நிலைமையை அறிய வேண்டுமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தொப்பிக்கலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகள் பூங்கா மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்காக அமைக்கப்பட்ட இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கோத்தபாய,

30 ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுபற்றி அறிந்துகொள்ளாத, இலங்கை வராதவர்கள் தற்பொழுது நாட்டுக்கு வந்து உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது.

தொப்பிக்கல பகுதி வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இடமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். எனினும், கடந்த காலங்களில் இந்த ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றிக்குப் பின்னர் இங்கு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க இடங்கள் சுற்றுலாவுக்கும், கல்வி அறிவூட்டும் நோக்கிலும் மக்கள் பார்வையிட வசதிசெய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.

டில்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் மரபுரிமைப் பூங்காவில், கிழக்கு மாகாண யுத்த வெற்றியின் ஞாபகார்த்தக் கண்காட்சிக் கூடமொன்றும் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷர் ஹர்ஷ அபேவிக்கரம, பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்தபீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்காக ஒருநிமிட மெளனஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொப்பிகலையில் இராணுவ நினைவுத் தூபி திறப்பு

இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.

30 வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த தொப்பிகலைப் பிரதேசம் மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று திறந்து வைத்தார்.

அத்துடன் தொப்பிகலையில் இராணுவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்றையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி, விமானப் படைத்தளபதி, பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்கக்கோன், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

2ம் இணைப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் சுற்றுலாத் தலமாக மாற்றம்

இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த இடம் இப்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாமாக விளங்கியது  தொப்பிகல புதர்காடுகள்.

அந்த இடத்தை 2007-ம் ஆண்டு இலங்கை இராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

அதன்பின்னர், 2 மாதங்களில் புலிகள் தங்கள் வசம் இருந்த கிழக்குப் பகுதி முழுவதையும் இராணுவத்திடம் இழந்தது.

இதையடுத்து, அங்கு தங்கள் செல்வாக்கை நிலை நாட்டிய இலங்கை அரசு, அந்த இடத்தை பாரம்பரிய பூங்காவாக மாற்றி அதனை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று  திறந்து வைத்தார்.

பல இன மக்கள் வாழும் இப்பகுதியில் ஏராளமான தாவர வகைகள், விலங்கினங்கள் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பு இருக்கும் என்று கோத்தபாய தெரிவித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 01-08-2014, 07:28.34 AM ]
ஆயுதம் ஏந்தாத ஒரே கிளர்ச்சியாளர்கள் நாமே என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 01-08-2014, 07:16.11 AM ]
வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 01-08-2014, 07:14.03 AM ]
இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைத் தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மனதால் நினைத்துக்கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது.

[ Friday, 01-08-2014, 07:13.29 AM ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பல தரப்பினர் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக அந்த முன்னணி வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 01-08-2014, 07:10.00 AM ]
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியை வெளியேறுமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நேரடியாக கூறாமல் அந்த முன்னணிக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 01-08-2014 03:52:04 GMT ]
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று ஜி-7 நாடுகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Friday, 01-08-2014 06:37:46 GMT ]
காங்கிரஸ் கட்சி, மற்றும் அதன் தலைவர் சோனியா காந்தி பற்றியும் பல ரகசியங்களை அம்பலமாக்கிவரும் முன்னாள் அமைச்சர் நட்வர்சிங் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 01-08-2014 07:08:51 GMT ]
மொயீன் அலியிடம் இந்திய அணி விக்கெட்டை பறிகொடுத்தது ஆச்சரியமாக உள்ளது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
[ Friday, 01-08-2014 06:04:42 GMT ]
Windows Phone இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான BBM அப்பிளிக்கேஷனை பிளாக்பெரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
[ Friday, 01-08-2014 07:31:44 GMT ]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் த்ரிஷா மற்றும் அனுஷ்கா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 31-07-2014 16:09:43 ]
ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்சவை யுத்தக்குற்றக் கைதியாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையாம் எனத் திட்டவட்டமாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.