செய்தி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:56.52 AM GMT ]
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக சிங்கள இளைஞர் அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிதுள்ளார்.

இதன்பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் அவரது கையை பின்னால் கட்டி வைத்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

ஆயினும் பொது மக்கள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

படுகாயமடைந்த இளைஞரை பொது மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-09-2014, 01:55.44 PM ]
இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தனியான நாட்டை அமைப்பதற்கான குறிக்கோள்களை கொண்டிருக்கவில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
[ Monday, 22-09-2014, 01:35.19 PM ]
குருஷேத்திரப் போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக எத்தனையோ அறிகுறிகள் தெரிவிக்கப்பட்டன. பாண்டவர்களுக்கும் உரிமை கொடுத்தால் கெளரவர்கள் கெளரவமாக வாழலாம் என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட்டன.
[ Monday, 22-09-2014, 01:34.18 PM ]
இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளது.
[ Monday, 22-09-2014, 12:59.05 PM ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை ஈட்டியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி சகல துரும்புச் சீட்டுகளையும் இழந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-09-2014, 12:43.54 PM ]
20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இடையில் நடக்கும் திருமணங்களில் 60 வீதமான திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
[ Monday, 22-09-2014 12:05:55 GMT ]
ரஷ்யாவில் நபர் ஒருவர் லொறி மற்றும் காரினால் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 22-09-2014 09:24:25 GMT ]
சண்டிகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 22-09-2014 06:00:46 GMT ]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தானின் லாகூர் அணிக்கு சானியா மிர்சா வீட்டில் ஹைதராபாத் பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
[ Monday, 22-09-2014 07:33:26 GMT ]
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம், பருவப் பெண்களே மூக்குத்தி அணிவர்.
[ Monday, 22-09-2014 07:42:15 GMT ]
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் படம் அனேகன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 22-09-2014 05:44:00 ] []
தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 30 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.