செய்தி
இந்தோனேசிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரங்கள் அறிவிப்பு!
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 12:14.43 AM GMT ]
இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட் பன்ங் அன் செலானின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

திவ்யா ஒன்றரை வயது பெண் குழந்தை, ரொனால்ட் 33 வயது ஆண், இன்ஜா 7வயது பெண் குழந்தை, டனிசன் 5 வயது ஆண் குழந்தை இவர்களது சடலங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், இவர்களது உறவினர்கள் உடனடியாக வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

20 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு கொன்சியூலர் பிரிவு இல, 14 சார் பாரன் ஜயதிலக மாவத்தை கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0112473899 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவோ விபரங்களை அறிந்துகொள்ள முடியுமென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜவாகி சியான்ஜர் கடற்பரப்பில் கடந்த ஜூலை 23ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் விபரங்களையே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு வெளியிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-04-2014, 12:50.44 AM ]
நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பௌத்த பிக்குகள், துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-04-2014, 12:37.34 AM ]
இலங்கையின் நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கையை பொது மக்கள் இழந்து விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
[ Thursday, 24-04-2014, 12:33.19 AM ]
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் கணி பாடத்தில் அதிகளவான மாணவர்கள் தொடர்ந்தும் சித்தியடையாத நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
[ Thursday, 24-04-2014, 12:27.30 AM ]
இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.
[ Thursday, 24-04-2014, 12:11.57 AM ]
டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீண்டும் அவரின் தந்தையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த கல்ப் நியூஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 23-04-2014 16:04:53 GMT ]
சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது.
[ Wednesday, 23-04-2014 12:17:10 GMT ]
பள்ளி வகுப்பறையில் 14 வயது மாணவியை 8 மாணவர்கள் கற்பழிப்புத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 23-04-2014 13:06:19 GMT ]
ஐதராபாத் அணியின் மோசமான களத்தடுப்பால் அணி தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என ஐதராபாத் அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
[ Wednesday, 23-04-2014 01:47:08 GMT ]
Sony நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Xperia M2 Dual இனை இம்மாதம் 25ம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
[ Wednesday, 23-04-2014 13:51:40 GMT ]
கௌதம் மேனன் தற்போது அஜித்தை வைத்து எடுக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை முட்ட எகிறி கொண்ட போகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 22-04-2014 17:58:11 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.