செய்தி
ஒலிவடிவம்:
விடுதலைப்புலிகளின் முத்திரைகள் ஒட்டப்பட்ட கடிதங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம்: இலங்கை தபால் மா அதிபர்
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 12:51.17 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்துச் செயற்படப் போவதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும்.

இதன் காரணமாக, சர்வதேச தபால் ஒன்றியத்தில் சில விதிகளை புறக்கணித்து நடக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயற்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு ஒருபோதும் இணங்கப் போதில்லை எனவும் இலங்கை தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 21-09-2014, 04:52.49 PM ]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர்நீத்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 27 வது ஆண்டு நிகழ்வுகள் அவுஸ்ரேலியா, சிட்னி இன்று இடம் பெற்றது.
[ Sunday, 21-09-2014, 04:42.52 PM ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி, அரசின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேலும் வேகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வழங்கப்பட்ட மக்கள் வாக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014, 04:26.03 PM ]
முல்லைத்தீவில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவித் திட்டத்திற்கு 4 பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளை விட, அதிகளவான பயனாளிகள் இம்மாவட்டத்துடன் சட்டபூர்வமாக இணைக்கப்படாத வெலி ஓயா பிரதேச செயலர் பிரிவிலிருந்து தெரிவாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
[ Sunday, 21-09-2014, 03:57.53 PM ]
இலங்கைத் தமிழர் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பேரினவாத பிடியில் சிக்கி தவிக்கிறர்கள். காலத்துக்கு காலம் பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் அதே நேரத்தில் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை இனஅழிப்பு, இனசுத்திகரிப்பு, இனகலப்பு, என்பவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
[ Sunday, 21-09-2014, 03:49.15 PM ]
தேசிய தேர்தல்களை எதிர்நோக்கத் தயார் எனவும் அண்மைய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014 10:43:58 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் ஹென்னிங்கை உயிருடன் விட்டுவிடுமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Sunday, 21-09-2014 13:57:50 GMT ]
சென்னையில் பள்ளி மாணவ, மாணவிகள் பிச்சைகாரர்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார்கள்.
[ Sunday, 21-09-2014 13:13:00 GMT ]
சிறுவர்களின் வாழ்வை உயர்த்த எவ்வித போராட்டங்களையும் எதிர்கொள்ள தயார் என இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
[ Sunday, 21-09-2014 13:39:39 GMT ]
பாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க சில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
[ Sunday, 21-09-2014 06:58:19 GMT ]
கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 21-09-2014 09:10:45 ]
இப்பொழுது சிறிலங்காவின் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றுடன், புலம்பெயர் தேசங்களில் இலங்கையர் கூடும் சமூக ஒன்று கூடல்கள், பொது இடங்கள் யாவும் கதைக்கப்படும் விடயம்,பொது ஜனதிபதி வேட்பாளார் பற்றியதாகவே உள்ளது.