செய்தி
ஒலிவடிவம்:
 Photo
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 01:44.11 AM GMT ] [ புதினப்பலகை ]
கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி  செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச்  சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-10-2014, 07:10.51 AM ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 26-10-2014, 06:58.37 AM ]
மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தினவுக்கு எதிரான மீனவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 26-10-2014, 06:35.13 AM ]
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் நீரின்றி காணப்பட்ட கிணற்றிலிருந்து 4 அடி நீளமான சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
[ Sunday, 26-10-2014, 05:14.48 AM ]
போர்க்குற்றங்கள் விவகாரத்தில் இலங்கை மீது சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம் என்று தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.
[ Sunday, 26-10-2014, 04:25.42 AM ]
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 25-10-2014 12:30:33 GMT ]
ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-10-2014 06:27:35 GMT ]
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
[ Sunday, 26-10-2014 06:47:24 GMT ]
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
[ Saturday, 25-10-2014 12:04:31 GMT ]
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சூரிய ஒளிப்பட்டாலே உடல் கருத்துவிடும் என எண்ணி முக்காடு போட்டுக்கொள்கின்றனர்.
[ Sunday, 26-10-2014 02:10:48 GMT ]
போரில் பாதிக்கப்பட்ட ஏழைச் சிறுமியின் கதை தான் தனிச்சான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-10-2014 09:07:40 ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதொன்றாக சிறுபான்மை மக்களுக்கு அமையப் போகின்றது என்பது சகலருக்கும் தெரியும்.