செய்தி
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 02:09.26 PM GMT ]
புனர்வாழ்வின் மூலம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவீர்கள் என இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மை சீர்குலைக்கப்படுகின்றது. எனவே அவ்வாறான குழுக்களுடன் முன்னாள் போராளிகள் இணைந்து செயற்பட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் இவர்கள் சட்ட ரீதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள்போராளிகள் குறித்து இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் போராளிகள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து செயப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதுல் பிரேமலத்ன வெளியிட்ட கருத்துக்கே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 17-09-2014, 12:52.13 AM ]
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் கட்சிகள் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றன. அரச வாகனங்கள் மற்றும் அரச பணியாளர்கள் என இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 17-09-2014, 12:38.06 AM ]
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
[ Tuesday, 16-09-2014, 11:55.53 PM ]
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 16-09-2014, 11:45.08 PM ]
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண் செல்வராசன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அருண் சொல்வராசனிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
[ Tuesday, 16-09-2014, 05:11.23 PM ]
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த  84 வயதான அப்துல் சமது என்பவரின் வயிற்றில் முருகை கற்பாறை வடிவிலான கல்லொன்று சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
[ Tuesday, 16-09-2014 10:42:34 GMT ]
ஸ்பெயின் நாட்டில் கல்லறை தொழிலாளி ஒருவர் 23 வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிணம் ஒன்றை தோண்டி எடுத்து அதனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 16-09-2014 11:48:01 GMT ]
திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
[ Tuesday, 16-09-2014 08:09:59 GMT ]
கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.
[ Tuesday, 16-09-2014 12:04:50 GMT ]
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விடயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால்.
[ Tuesday, 16-09-2014 06:57:42 GMT ]
கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 16-09-2014 09:51:18 ]
வவுனியாவில் அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த மத்திய குழுக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.